சட்டச் சொற்கள் விளக்கம் 831-840 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 821-830 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 831-840 831. Advantage, Collateral கூடுதல் ஆதாயம் ஓர் ஒப்பந்தத் தரப்பார், தம் வலிமையான பேரம் பேசும் ஆற்றலைப் பயன்படுத்தித் தனக்கு /தமக்கு ஆதாயமான/சாதகமான கூறுகளைச் சேர்த்துக் கொள்வது. பெரும்பாலும் விகிதச் சமமற்ற முறையில் அவருக்கு வழங்கப்படும் நன்மைகளுக்கு மேல் கூடுதலாகப் பெறும் வகையில் விகிதத்தைச் சேர்த்துக் கொள்வது. இவ்வாறு பெறும் கூடுதல் ஆதாயம். 832. Adverse Comment எதிர்மக் கருத்து யாரைப்பற்றியோ / எதைப்பற்றியோ…
சட்டச் சொற்கள் விளக்கம் 821-830 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 811-820 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) 821. Adopted Child மகற்கோடல் குழந்தை மகற்கோடல் என்பது உணர்ச்சி சார்ந்த மன்பதை, சட்டபூர்வச் செயல்முறையாகும். இதன் மூலம், பெற்றெடுத்த பெற்றோரால் வளர்க்கப்படாத குழந்தைகள் மற்றொரு குடும்பத்தின் முழுமையான நிலையான சட்ட உறுப்பினர்களாக மாறுகிறார்கள். அஃதாவது மகற்கோடல் குழந்தையின் அனைத்து உரிமைகளும் பொறுப்புகளும் மகற்கோடல் பெற்றோருக்கு நிலையாக மாறும். மகற் கோடல் என்பது மகவைக் கொண்ட என்றும் மகவாகக் கொள்ளப்பட்ட என்றும் இரு பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. காண்க: Adoption…
சட்டச் சொற்கள் விளக்கம் 811-820 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 801-810 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 811-820 811. Admiralty Jurisdiction கடலாண்மைப் பணி வரம்பு. கடல்சார் உரிமை கோரல்கள் தொடர்பான பணியாட்சி வரம்பு தொடர்புடைய நீதிமன்றங்களுக்கு இருக்கும். கடலாண்மைப் பணிவரம்பு என்பது கடல்நீர் எல்லை வரை இருக்கும். 812. Admissibility ஏற்புடைமை ஏற்புத்தன்மை ஏற்கத்தக்கத்தன்மை; ஒன்றை – குறிப்பாகச் சான்றினை – நீதிமன்றத்தால் அல்லது உரிய அலுவலரால் ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்மை. 813. Admissibility Of…
சட்டச் சொற்கள் விளக்கம் 801-810 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 791-800 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 801-810 801. Administrative Machinery பணியாண்மை இயங்கமைவு Machinery என்றால் இயந்திரம் என நேர் பொருளில் சொல்வதை விட இயந்திரத்தின் இயக்கம் போன்று இயங்கு நிலையைக் குறிப்பதால் இயங்கமைவு எனலாம். பணியாண்மைக்கான செயற்தொகுதியைக் குறிப்பதே பணியாண்மை இயங்கமைவு ஆகும். 802. Administrative Office பணியாண்மை அலுவலகம் ஒரு துறை அல்லது ஓர் இயக்ககம் அல்லது…
சட்டச் சொற்கள் விளக்கம் 791-800 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 781-790 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 791-800 791. Administration Bond பணியாட்சிப் பத்திரம் பிணை முறி விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட அல்லது நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சொத்துரிமை விண்ணப்பத்தில் நீதிபதியால் கோரப்பட்ட பிணையர்கள் உறுதிமொழி. உடைமையின் பணியாட்சியரால், விருப்புறுதி/இறுதி முறிக்கேற்பச் செயற்படுவதற்கான உறுதி மொழி அளிக்கும் பத்திரம். – இந்திய மரபுரியமையர் சட்டம் 1925(Indian Succession Act, 1925) 792. Administration Of Justice நீதிப் பணியாண்மை நீதிப் பணியாண்மை என்பது அரசின் முதன்மைச் செயல்பாடாகும்….
சட்டச் சொற்கள் விளக்கம் 781-790 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 771-780 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 781-790 781. Adjudication Committee நீதிமுறைக் குழு எதிர்ம நடவடிக்கை மேல்முறையீடுகளைக் கேட்டுத் தீர்ப்பதற்கு அமைக்கப்படும் இடைக்காலக் குழு. 782. Adjudicative Process தீர்ப்புப் படிமுறை நீதிமுறையில் தீர்மானிக்கும் நெறிமுறை. தீர்ப்புச் செயல்முறை. 783. Adjudicator தீர்ப்பாளர், தீர்ப்பு வழங்குபவர், தீர்ப்பு வழங்குநர் பூசல் அல்லது தகராறு அல்லது போட்டியில் தகுநிலையில் தீர்ப்பளிப்பவர். 784. Adjudicatory Bodies (Adjudicatory Body) தீர்ப்புரைக் குழாங்கள்…
சட்டச் சொற்கள் விளக்கம் 771-780 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 761-770 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 771-780 771. Adjourn Sine Die கால வரையறையின்றி ஒத்திவைப்பு வேறு நாள் குறிப்பிடாமல் ஒத்திவைப்பு இலத்தீனில் sine என்னும் சொல்லிற்கு இன்றி என்றும் diē என்னும் சொல்லிற்கு நாள் என்றும் பொருள். சேர்த்து வரும் பொழுது நாளின்றி எனப் பொருள் தருகிறது. எனவே, நாளில்லாமல் – நாளைக் குறிப்பிடாமல் ஒத்திவைப்பது எனப் பொருளாகிறது. நீதிமன்றம், வழக்கினை மறு/வேறு நாள் குறிப்பிடாமல் – கால வரையறையின்றி மறு…
சட்டச் சொற்கள் விளக்கம் 761-770 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 751-760 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 761-770 761. Adequate Grounds போதுமான காரணங்கள் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள, நீக்க, வழக்கினை எடுத்துக் கொள்ள, வழக்கைத் தள்ளுபடி செய்ய, மேல் முறையீட்டை எடுத்துக்கொள்ளப் போதுமான தற்சார்பான காரணங்கள் இருத்தல். மாநில நீதிமன்றங்களில் இருந்து வரும் வழக்கை எடுத்துக் கொள்ள உச்ச நீதி மன்றம் தரப்பாட்டை வரையறுப்பதற்கான போதிய காரணங்கள். 762. Adequate Reasons To The Contrary மாறாகச் செய்வதற்குப் போதிய காரணங்கள் மாறாகப்…
சட்டச் சொற்கள் விளக்கம் 751-760 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 741-750 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 751-760 751. Address, Special தனிப் பேருரை ஒரு பொருண்மை குறித்துச் சிறப்பு அழைப்பாளரால் அல்லது சிறப்பு நிலையில் அளிக்கப்பெறும் சொற்பொழிவு. 752. Addressing Evidence ஆதாரங்களை அணுகுதல் ஒன்றை வெற்றிகரமாக முடிப்பதற்கு, அடிப்படை ஆதாரங்களைத் துணைக் கொள்ளல். 753. Addressing The Court நீதிமன்ற விளி சொல் நீதிமன்றத்தாரை விளிக்கும் மதிப்பிற்குரிய சொல்லாட்சி. வழக்கினை நீதி மன்றத்தில் எடுத்துரைக்கும் பாங்கு. 754. Adduce Evidence சான்று…
சட்டச் சொற்கள் விளக்கம் 341-350 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 331-340 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 341-350 341. Access, direct நேரடி அணுகல் மின்னஞ்சல் முதலியவற்றை நேரடியாக அணுகும் வாய்ப்பு. 342. Access, open court to Which the public may have மக்கள் அணுகுவதற்கேற்ற வெளிப்படையான நீதிமன்றச் செயற்பாடு. கொள்கையளவில், இந்தியக் குடிமக்கள் அனைவரும் இந்நாட்டில் உள்ள நீதிமன்றங்களை அணுகலாம். ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதிமன்றத்தின் மூலம் நீதி பெற உரிமை உண்டு என்பதை இஃது உணர்த்துகிறது. எந்தவொரு குடிமகனும் தங்கள்…
சட்டச் சொற்கள் விளக்கம் 331-340 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 331-340 : இலக்குவனார் திருவள்ளுவன் Accepted and countersigned ஏற்று மேலொப்பமிடப்பட்டது ஆவணத்திலுள்ள விதிகள்/வகையங்கள்/கூறுகள், செயன்மை(action) இரு தரப்பாராலும் ஏற்கப்பட்டதன் அடையாளமாக முதல் தரப்பார் கையொப்பமிட்டதும் அதனை ஏற்கும் வகையில் மறு தரப்பாரும் கையொப்பமிடுவது. ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், முதன்மையான ஆணைகள், என எவையாக இருந்தாலும் ஒப்புதலுக்கான இரண்டாம் கையொப்பமே மேலொப்பமாகும். Accepted in principle கொள்கையளவில் ஏற்றல் முழு விவரங்கள் அறியாச் சூழலில், சாத்தியமா இல்லையா…
சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 311-320 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 321-330 321. acceptance of final bill இறுதிப் பட்டி ஏற்பு இறுதிப் பட்டியை ஏற்றல் கணக்கை முடித்து வைக்கும் பட்டி அல்லது நிதிப்பட்டியல் ஏற்றல். 322. acceptance of less sum குறை தொகை ஏற்பு குறைந்த தொகை ஏற்றல் ஒப்பந்தத்தில் அல்லது உடன்படிக்கையில் குறித்த தொகையைவிடக் குறைவான தொகையை ஏற்றல். 323. acceptance of offer தருகை ஏற்பு…