(வெருளி நோய்கள் 961-965: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 966-970 சட்டை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சட்டை வெருளி.பெளகமிசோ – Poukamiso என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சட்டை.ஆடை வெருளி உள்ளவர்களுக்குச் சட்டை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 சதுரம் குறித்த வரம்பற்ற பேரச்சம் சதுர வெருளி.சதுரமான கட்டடங்கள், சதுரமான அரங்குகள், சதுரமான அமைப்புகள் முதலியவை மீதும் தேவையற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.சிலர் சதுரம் என்பதை வடசொல்லாகக் கருதுகின்றனர். எனவே, அதனை நாற்கரம் என்பர். ஆனால், வட்டம் என்பது போன்றே சதுரம் என்பதும் தூய தென்சொல்…