கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 97. இயல் 20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 96: ஒருதலைக் காமம் – தொடர்ச்சி) பூங்கொடி இயல் 20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை கோமகன் வஞ்சினம்           கலங்கிய கோமகன் கனலும் நெஞ்சினன் இலங்கிழை நல்லாள் எழில்விழிப் பூங்கொடி சொல்லிய மாற்றம் சுடுநெருப் பாகிக் கொல்லுவ தென்னக் கொடுந்துயர்ப் படுத்தப்                    பொறாஅ மனத்தினன், புந்தி மயங்கி     5           மறாஅ மனத்தொடு மணங்கொள இயைவள் எனாஅ நினைந்தேன் எற்பழித் தொதுக்கினள்; தருக்கிய பூங்கொடி செருக்கினை யடக்கி வருத்துமவ் வொருத்தியை வாழ்க்கைத் துணையெனக்             கொள்ளா தொழியேன்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 89: சண்டிலியின் அழைப்பு

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 88 : சண்டிலி புகழ்ந்து வேண்டல்- தொடர்ச்சி) பூங்கொடி சண்டிலியின் அழைப்பு பிரிவினை யறியாப் பெருமனக் கொழுநன் பெரிதுறு விழுமமோ டிங்கெனைப் பிரிந்தோன் விரைவினில் வரூஉம் விறலி! எனக்கிசை        —————————————————————           தொக்கு – சேர்ந்து, வரூஉம் – வருவான்.  ++++++++++++++++++++++++++++++++++++ ஊட்டிய தலைவீ ! ஒன்றுனை வேண்டுவல்                பாட்டியல் பயில வேட்டவர் பலர்வட       270           நாட்டிடை வேங்கை நகரினில் வதிவோர் ஊட்டுவோர் ஆங்கண் ஒருவரும் இன்மையின் வாட்ட முறுவது வருங்கால் உணர்ந்தேன் அரிவைநீ அருளுடன்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 88 : சண்டிலி புகழ்ந்து வேண்டல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 87 : நிலவுக் காட்சி-தொடர்ச்சி) பூங்கொடி சண்டிலி புகழ்ந்து வேண்டல்           `அன்னைஎன் மொழியுள் அமைந்தநல் லிசையும் தொன்மை மொழியுள் தோன்றிசை சிலவும் ஒல்லும் வகையான் உணர்ந்துளேன் ஆயினும் உள்ளமும் உணர்வும் உருகிட இன்ப                 வெள்ளம் பாயும் வியனிசை இதுபோல்  225           இந்நாள் எல்லை யாண்டும் கேட்டிலேன்; என்நா சிறிதால் எவ்வணம் புகழ்வேன்? இதன்றிறம் சிறிதெனக் கியம்புதி கொல்லோ? பதமிது வன்றேல் பைந்தொடி பொறுத்தருள்’           எனநான் பணிவுடன் இயம்பினே னாக,  230           அனநடை…