சதுரங்கப் போட்டி, வ.அ.த.ச.
வணக்கம்! வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் வணக்கம் வட அமெரிக்காவின் ஏழு வண்ணப் போட்டிகளோடு சதுரங்கப் போட்டியையும் நடத்த ஆயத்தமாக உள்ளது. போட்டியில் பங்கு பெற இந்த இணைப்பைச் சொடுக்கவும். https://tinyurl.com/VVAChessRegistration போட்டியின் அனைத்து விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள்களுக்கு இங்கே சொடுக்கவும். https://tinyurl.com/VVAChessRules சதுரங்கப் போட்டியில் பங்கு பெற்று பரிசுகளை வெல்வீர்! தமிழ் வாழ்க!
தேவகோட்டையில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ. சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார். நடுநிலைப் பள்ளி அளவில் இரண்டு பிரிவில் போட்டிகள் நடைபெற்றன. இதனில் 11 அகவைக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்கள் பிரிவில் 6 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர் கார்த்திகேயன் முதலிடத்தையும், அதே வகுப்பு மாணவர் சஞ்சீவு இரண்டாம் இடத்தையும் , பெண்கள் பிரிவில் 6 ஆம்…
