97. சனாதன நூலாகிய அருத்த சாத்திரம் மக்கள் அனைவருக்கும் உரிய நூல் என்கிறார்களே! 98. அருத்த சாத்திரம் திருக்குறளுக்கும் மூத்த நூல் என்பது பொய்யா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 94-96 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 97-98 மார்க்கு மக்கினீசு என்னும் அறிஞர், ‘அருத்த சாத்திரம் மெளரியர் காலத்து ஆவணமா?’ எனக் கட்டுரை எழுதியுள்ளார்.(Is the Arthasastra a mourian document? by Mark Mcclish) இதில் அருத்த சாத்திரம் மெளரியர் காலத்து நூலல்ல, இதன் ஆசிரியராகக் கூறப்படும் சாணக்கியர் அல்லது கெளடில்யர் சந்திர குப்புத மன்னரின் அமைச்சர் அல்லர், அவருக்குப்பின் பல நூற்றாண்டுகள் கழித்து வாழ்ந்த சிலரால் தொகுக்கப்பெற்றது இந்நூல் என அவர் இதில் நிறுவியுள்ளார். அருத்தசாத்திரத்தைக் கெளடில்யன் என்பான்…
