கற்றல் குறைபாட்டை (Dyslexia-வை) வென்ற தன்னம்பிக்கையின் சிகரம்!

கற்றல் குறைபாட்டை (Dyslexia-வை) வென்ற தன்னம்பிக்கையின் சிகரம்! அறுபதாயிரம் அலுவலர்களை மேலாளும்(நிருவகிக்கும்), கற்றலை இடை நிறுத்திய முன்னாள் மாணவர்! முந்நூறாயிரத்து ஐந்நூறு(மூன்றரை இலட்சம்) மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நம்பிக்கையூட்டும் கற்றல் குறைபாடுடைய மாணவர்! வராததை வரவழைத்த வெற்றி மனிதர்! கனவை நனவாக்க… வாழ்க்கையில் வெற்றி பெற… ஆவல் இருக்க வேண்டும்! அதற்கான செயலும் இருக்க வேண்டும்! உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில் உங்கள் வெற்றி இருக்க வேண்டும்! நம் வாழ்க்கையே ஊதுபை (பலூன்) மாதிரிதான்! – இந்திய வருமான வரி இணை ஆணையாளர் பேச்சு  …

தாய் மொழியில் பயின்றால்தான் மக்கள் வளம் பெறுவார்கள்- சுபாசினி திரெம்மல் உரை

செருமனியில் அனைத்துப் பள்ளிகளும் அரசு பள்ளிகளே! தங்க நகையே அணியாத நாடு செருமன்! வாழ்க்கையில் கல்விதான் நண்பன்!   “வாழ்க்கை முழுவதும் கல்விதான் சிறந்த நண்பனாக இருக்கும்” எனச் செருமனியிலிருந்து வந்திருந்த பெண் ஆராய்ச்சியாளர் சுபாசினி திரெம்மல் பேசினார்.   தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் வாழ்வியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.   விழாவில் செருமனி தமிழ் மரபு அறக் கட்டளைச் செயலரும், கல்வெட்டு…