94.  பிராமணர்களை மட்டும் உயர்த்திச் சொல்வதாகக் கூறுவது தவறானது என்கிறார்களே!+95.      சனாதன நூல்கள் நல்ல கருத்துகளையே கூறவில்லையா?  + 96.        இடைச்செருகல் கருத்துகளைத்தான் பரப்புகிறார்களா?- இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 93 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 94-96 பிராமணனைச் சாது என நினைத்து அழிப்பவன் செல்லுமிடங்களில் புவியும்  சோதியும் அவனை வெறுக்கும். பிராமணன் துன்புறுத்த(இம்சிக்க)த் தகாதவன். இந்திரன் அவனைத் தீச்சொல்லிலிருந்து காப்பான். பிராமணன் இனிமையான உணவை உண்கிறான் என அவ்வுணவு மீது ஆசை கொள்ளும் மதியற்றவன் நூறு முட்களுள்ளதை விழுங்குபவனாவன்; அவன்அதைச் சீரணிக்க இயலாது. பிராமணன் தேவர்களின் இதயத்தோடு அவனை ஏசுபவர்களைத் துவம்சம் செய்கிறான். பிராமணர்கள் எதிரியைத் தொலைவிலிருந்தே அழிப்பார்கள். அரசர்கள் பிராமணனது பசுவைப் புசித்து பாழானார்கள். தேவ பந்துவான பிராமணனை இம்சிப்பவன் முன்னோர்கள் செல்லும உலகத்துக்குச்…

? 93. காயத்திரி மந்திரத்தைப் பிராமணரல்லாத பிறர் சொன்னால் என்ன ஆகும்?  – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 92 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 93 புத்தி விழிப்படைய காயத்திரி மந்திர வழிபாடு முதலியவற்றைச் செய்யுமாறு கடஉபநிடதம் கூறுகிறது. காயத்திரி மந்திரத்தைப் பிராமணர்கள்தான் சொல்ல வேண்டும் என்கிறது வேதம்.  இல்லை இல்லை. ஒழுக்கமானவர்கள் யாரும் காயத்திரி மந்திரம் கூறலாம் என இக்கால நஞ்சு நெஞ்சுடையோர் விளக்கம் தருவர். ஆனால் வேதத்தில் அவ்வாறு இல்லை. நம்மை ஏமாற்றுதற்காக இவர்கள் தரும் தவறான விளக்கம் இதுவே. பிராமணர்கள்தான் காயத்திரி மந்திரம் சொல்ல முடியும் என்றால் அவர்கள் மட்டும்தான் அறிவுக்கூர்மை…

92 ?. ஒருவேளை முன்பு சனாதனத்தில் பாகுபாடு இருந்திருக்கலாம். இப்பொழுது இல்லை என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 89-91 தொடர்ச்சி) “எதிரிகளுக்குச் சுரத்தைக் கொடு” என்பது வேதம். “நாத்திகனுக்கு மருத்துவம் பார்க்கக் கூடாது” என்றவர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி (தெய்வத்தின் குரல், தொகுதி 3, பக்கம் 148). “தூயவன் ஒருவன் விருந்தினனாக வரும்போது நெருப்பு போலவே நுழைகிறான்”  என்பது ஒரு மொழி பெயர்ப்பு வரி.  ஆனால், மூலநூலாகிய சமற்கிருதத்தில் தூயவன் என்று இல்லை. பிராமணன் என்றுதான் குறிக்கப்பெற்றுள்ளது. ஆங்கில மொழி பெயர்ப்பிலும் அவ்வாறுதான் உள்ளது.  இதன் மற்றொரு பாடல் “யாருடைய வீட்டில் தூயவன் ஒருவன் உணவின்றி இருக்க நேர்கிறதோ, அற்பப் புத்தி உடையவனான…

89. மனுவில் மொழி பெயர்ப்பாளர்கள் செய்த சதியா? 90. உதயநிதி சொன்னது கடுந்தண்டனைக்குரிய குற்றமா? 91 சனாதனவாதிகள் உதயநிதியின் தலைக்கு விலை பேசுவது ஏன்?- இலக்குவனார் திருவள்ளுவன்

((சனாதனம் – பொய்யும் மெய்யும் 87-88 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 89-91 மனு நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியர் சர்.வில்லியம் சோன்சு என்பார் 1794இல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தமிழில் திருலோக சீதாராம் மொழி பெயர்த்துள்ளார். திருலோக சீதாராம் என்றால் திருவையாறு (உ)லோகநாதய்யர் சீதாராமன். இவர் எழுத்தாளர், இதழாளர், மொழி பெயர்ப்பாளர், பன்முக ஆளுமை மிக்கவர். பிராமணரான இவர் எப்படித் தம் வருணத்தாருக்கு எதிராகத் தவறாக மொழி பெயர்ப்பார்? எனவே, மனுவில் உள்ள அறமற்ற செய்திகளை…

87 & 88 சனாதனத்தை எதிர்ப்பவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 86 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 87 & 88 சனாதனத்தை இறை ஏற்பாளர்களும் எதிர்க்கிறார்கள். இறை மறுப்பாளர்களும் எதிர்க்கிறார்கள். எனவே,  கடவுள் மறுப்பாளர்கள் மட்டுமே சனாதனத்தை எதிர்க்கிறார்கள் என்பது உண்மையல்ல. பொதுவாகக் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் பகுத்தறிவுவாதிகளாக இருக்கிறார்கள்; தன்மதிப்பும் தன்மானஉணர்வும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் சனாதனத்தை எதிர்ப்பது இயற்கை. அதற்காக இறை மறுப்பாளர்கள் மட்டுமே சனாதனத்தை எதிர்ப்பதாகக் கருதுவது தவறே. இறையன்பர்கள் பலரும்  தாங்கள் இல்லாத மேற்சாதியால் ஒடுக்கப்படுவதாகவும் இழிவுபடுத்தப் படுவதாகவும் உணர்ந்து எதிர்க்கிறார்கள். எனவே இறையன்பர்கள்…

86. சனாதனத்தை எதிர்ப்பவர்கள் இந்துமதப் பகைவர்கள் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 85 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 86 அதே நேரம் இந்து மதம் என்பது குறித்த சிக்கலையும் பார்க்க வேண்டும். தமிழர்கள் இந்துக்கள் அல்லர். வடக்கே இருந்த ஆரியச் சமயத்தில் ஆட்கொள்ளப்பட்டார்கள். எனவே வடக்கே இருந்த இந்து சமயமாகத் திரிக்கப்பட்ட  ஆரிய/இந்து சமயத் தவறான கோட்பாடுகள், பழக்க வழக்கங்கள் முதலியவை இவர்கள் மீதும் ஏற்றப் பெற்றன. எனவே, இவர்களைத் தமிழர் சமயத்தவர் என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் இந்து வேறு தமிழர் சமயம் வேறு என்று…

54. இல்லாத ஒன்றை ஒழித்துக் கட்டுவதாகப் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது.”- பன்னீர் செல்வம்.55. 55. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனச் சொல்லிக் கொடுத்தது சனாதனம் – இரங்கராசு + 56. 56.    சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென்றால், அறநிலையத் துறையைக் கலைத்துவிட வேண்டியது தானே? -இரங்கராசு  : மெய்யுரை காண்க – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 51-53 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 54-56 (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன்

51. மசூதிகளுக்கு, தேவாலயங்களுக்குச் செல்வதைப்போல் சனாதனத்த மதிக்க வேண்டும். – மமதா பானர்சி 52. சனாதன மதம் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது – மருதாசல அடிகளார் 53.   “சனாதனம் என்பது ஒரு பழமையான வாழ்வியல் முறை – இவற்றின் மெய் என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 48-50– தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 51-53 நச்சுப் பொருளையும் மருந்துப் பொருளையும் வேறுபடுத்தாமல் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்பது எவ்வளவு தவறோ அதுபோன்றதுதான் அவரது உரையும். சனாதனம் என்றால் என்னவென்று அறிந்து கொள்ளாமல் சனாதனத்தைப்பற்றிய தவறாகக் கூறப்படும் உயர்வு கருத்துகளை நம்பி இவ்வாறு கூறுகிறார். இந்த இடத்தில் தருமம் என்பது செய்கையைக் குறிக்கிறது. செய்யப்படுவதையே சிலர் கடமையாக விளக்குகின்றனர். அறம் என்பதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. சனாதன தருமம் என்றதும் தருமம் என்பதைப் பிறர்போல் அறம் என நம்பி இவ்வாறெல்லாம் தெரிவிக்கிறார். நன்கு…