தமிழ்நாட்டில்தான் சனாதனம் உருவாகியது என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருப்பது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(எல்லாரும் சமம் என்பது சாத்தியமில்லை – சரியா?- தொடர்ச்சி) 5. இன்று தமிழ்நாடு என்று அழைக்கப்படும் . . . . இந்த நிலத்தில்தான் சனாதன தருமம் உருவாகியது. இந்தத் தருமம் பாரதம் முழுவதும் பரவியது. பாரதம் என்றால் சனாதன தரும இலக்கியங்கள் என்று பொருள்” என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருக்கிறாரே!  இது பொதுவாக ஆரியர்களின் வழக்கம். ஒன்றைப்பற்றிய தீய சக்தியை மக்கள் புரிந்து கொண்டால், அதனைச் சமாளிப்பதற்காக அதைப்பற்றிய இல்லாத நல்ல செய்திகளை இருப்பதாகப் பரப்புவர். அதுபோல்தான் இப்போதும். சனாதனத்திற்குரிய எதிர்ப்பு…

எல்லாரும் சமம் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை எனச் சனாதனவாதிகள் கூறுவது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் என்பது நிலையானதுதானா? (தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 3. எல்லாரும் சமம் என்பது, எழுதவும் பேசவும் இனிப்பாக இருக்கும்; நடைமுறையில் அது சாத்தியமில்லை. ஒரே வண்டியில் பயணிப்பதால், உரிமையாளரும் ஓட்டுநரும் ஒன்றில்லை. – தினமலரின் சிந்தனைக் களத்தில் சானதனக் காவலாளி இரங்கராசு கூறிய செய்தியாகும்.- சரிதானா?  இஃது அனைத்துச் சாதியினரையும் சமமாகப் பார்க்கக் கூடாது என்பதற்குச் சொல்லப்படும் மறுப்பு விளக்கமாகும். பதவி முறையில் உள்ள வேறுபாடு நிலையானதல்ல. அப்பதவி மாறும் பொழுது அதுவும் மாறும். இன்றைய வண்டி ஓட்டுநர் நாளைய உரியமையாளராகலாம்….

சனாதனம் என்பது நிலையானதுதானா?

(சனாதனம் – பொய்யும் மெய்யும் – பதிப்புரை – தொடர்ச்சி) சனாதனம் என்பது நிலையானதுதானா? நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறிவு ஆண்மை, கடை. என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 331) இதன் மூலம், “நிலைத்திருத்தல் அல்லாதனவாகிய பொருள்களை, நிலைத்து இருப்பன என்று நினைக்கின்ற அற்ப அறிவைக் கொண்டு இருத்தல் இழிநிலை” என்கிறார் திருவள்ளுவர். இத் திருக்குறளுக்கு விளக்கமாக,  மாதவச் சிவஞான யோகிகள் பாடிய, “சோமேசர் முதுமொழி வெண்பா” என்னும் நூலில்  இத்திருக்குறளை விளக்கிப் பின்வரும் பாடல் வருகிறது. ஆக்கையும் ஆயிரத்துஎட்டு அண்டங்களும் நிலையாத் தூக்கி…