செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-4(2010): இலக்குவனார் திருவள்ளுவன்
(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-3(2010): தொடர்ச்சி) செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-4(2010) 11.ஆந்திரா, பீகார், தில்லி (2 இடங்கள்), கேரளா, மகாராட்டிரா, ஒரிசா, இராசசுதான், உ.பி., குசராத் ஆகிய மாநிலங்களில் சமசுகிருதப் பல்கலைக்கழகம் இயங்க மத்திய அரசின் முழு நல்கை வழங்கப்படுகிறது. வாழ்வு கொடுக்கப்பட்டு வரும் மொழியான சமசுகிருதத்திற்கு முழுநல்கை வழங்கப்படுவது போல், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்படும்; தமிழ் மக்கள் 50,000 எண்ணிக்கைக்குக் குறையாமல் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழ்ப் பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கானல்நீராகப்…
