124. கருநாடக மாநிலத்தில் உள்ள மாத்தூரில் சமற்கிருதம் பேசுநர் உள்ளதாகக் கூறப்படும் பொய்யுரை – இணைப்பு
(சனாதனம் பொய்யும் மெய்யும் – நிறைவான செய்தி தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 124 சமற்கிருத நூல்கள் தமிழ் நூல்களுக்குப் பிற்பட்டவை, தமிழ் இலக்கியக் கருத்துகளைத் திருடித் தமதாகக் காட்டுவன, காலந்தோறும் தமிழ் இலக்கியச் சிறப்புகளைச் சிதைப்பதையும் பொய்யான புகழைச்சமற்கிருத நூல்களுக்கு ஏற்றுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ள கூட்டம் இயங்கி வருவதையும் உணர்த்துவதற்கும்தான். அண்டப்புளுகு, ஆகாயப் புளுகு என்றெல்லாம் கூறுவோம். இற்றைக்காலத்தில் கோயபல்சு புளுகு என்றும் கூறுவோம். இவற்றையெல்லாம் விஞ்சியது சமற்கிருத நூலார் புளுகுகள். இனி நாம், சமற்கிருதப் புளுகு என்றோ சமற்கிருத நூலார் புளுகு…
