அறிவியலுக்குக் கிரந்தம் தேவையா? -இலக்குவனார் திருவள்ளுவன்
அறிவியலுக்குக் கிரந்தம் தேவையா? தமிழ், தனித்தியங்க வல்லது என்பது அதன் சொல் வளத்தால் மட்டும் அல்ல; நெடுங்கணக்காலும்தான். எனவே, பிற மொழிச் சொற்களை நீக்கித் (தனித்) தமிழ் இயக்கம் வெற்றி காண அயல் எழுத்து வடிவங்களையும் அறவே நீக்க வேண்டும் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அயல் எழுத்து வடிவம் என்று பார்க்கும் பொழுது பொதுவாக அயல் எழுத்தொலிகளைக் குறிக்கப்பயன்படும் கிரந்தம் நடைமுறையில் இருப்பதால்தான் பிற மொழிச் சொற்களை நாம் தங்கு தடையின்றிப் பயன்படுத்துகின்றோம். உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் தனித்தன்மையை நமக்கு உணர்த்திய அறிஞர் காலுடுவெல்; அதனை வழி மொழிந்து…