படைப்பிற்குப் பொருள் தரும் பாரதிபாலன் கதைகள் – சா.கந்தசாமி
சொல்லப்படும் வாழ்க்கையோடு இணைந்து போகும் மொழி இலக்கியத்தில் ஏற்படுகின்ற மாறுதல்களை பத்துப்பத்து ஆண்டுகளாகப் பிரித்து, பகுத்துச் சொல்வது ஒரு மரபாக இருக்கிறது. அஃது இலக்கியத்தில் ஏற்பட்டு இருக்கிற மாறுதல், புதிய போக்கு, சிந்தனை என்பது சமூகத்தில் ஏற்பட்ட அளவிற்கு இருக்கிறதா என்பதைத் தீர்மானிப்பது வேறு. சில நேரங்களில் இந்தக் கணிப்பு இலக்கியத்தரம் என்பதை விட்டு விட்டு சமூகக் காரணிகளை மட்டும் கணக்கெடுத்துச் சொல்வதாக அமைந்து விடுவதும் உண்டு. மேலும் சமூக மாறுதல், படைப்பு இலக்கியத்திற்குள் அதிகமாக வராமல் இருக்கிறது என்பதைச் சொல்வது மாதிரியும் இருப்பது…
புதிய மாதவியின் ‘பெண்வழிபாடு’ : சிந்தனையைத் தோற்றுவிக்கும் சிறுகதைத்தொகுப்பு – வளவ. துரையன்
புதிய மாதவியின் பெண்வழிபாடு: சிந்தனையைததோற்றுவிக்கும் சிறுகதைத்தொகுப்பு சுட்ட பழங்களும் சுடாத பழங்களும் மும்பையை வசிப்பிடமாகக் கொண்ட புதிய மாதவி புதிய இலக்கியத்தில் முதன்மையான இடத்தை வகிப்பவர். கவிதை, சிறுகதை, திறனாய்வு எனப் பல வகையான தளங்களில் இயங்கி வருபவர். ‘பெண் வழிபாடு’ எனும் அவரது சிறு கதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில் பல்வேறு தளங்களில் இயங்கும் கதைகள் இடம் பெற்றிருப்பதால் வாசிக்கக் களைப்பில்லாமல் இருக்கிறது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். பெண் தலைமை தாங்கும் மன்பதை மறைந்து ஆணை முதலாகக் கொண்ட மன்பதை…
நந்தன் சீதரன் எழுதிய தாழி – சிறுகதைத் தொகுப்பு – ஆய்வரங்கம்
வைகாசி 23, 2046 / சூன் 06, 2015 தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை மதுரை
