உ.வே.சா.வின் என் சரித்திரம் 122: கல்லூரி நுழைவு

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 121: நான் சொன்ன பாடல்-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-82 சோதனையில் வெற்றி – தொடர்ச்சி பிறகு திங்கட்கிழமை நல்ல வேளையில் கல்லூரிக்குப் போக வேண்டுமென்று எண்ணி சோதிடரைக் கண்டு பார்த்த போது 12 மணிக்குமேல் நல்லவேளை யென்று தெரிந்தது. “நாளைக்குப் பதினொன்றரை மணிக்கு சித்தமாக இருந்தால் நான் கல்லூரிக்குப் போய்ச் சொல்லியனுப்புகிறேன். அப்போது வரலாம்” என்று செட்டியார் சொல்லி எனக்கு விடை கொடுத்தனுப்பினார். அன்று மாலையில் முக்கியமான ஆலயங்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வந்தேன். சொல்லும் முறை சரியானபடி இருந்தால் அவர்களுடைய…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 121: நான் சொன்ன பாடல்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 120: அத்தியாயம்-82 சோதனையில் வெற்றி- தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-82 சோதனையில் வெற்றி – தொடர்ச்சி “கடைசியில் என்னிடமே தள்ளிவிட்டீர்களா? சரி. என்ன விசயத்தை அமைக்க வேண்டுமோ அதையும் சொல்லி விடுங்கள்” என்றார் செட்டியார். அப்போது சிரீநிவாசையர், “மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் நீங்கள் முதலிற் படித்தவர்கள். நான் பின்பு படித்தவன். இதனால் சேசுட்ட கனிசுட்ட முறை நம் இருவருக்கும் உண்டு. இந்த முறையால் நீங்கள் இதுவரை பார்த்து வந்த வேலையை எனக்குச் செய்விக்க வேண்டும். இந்தக் கருத்தை வைத்து ஐந்து நிமிசங்களில்…