நாலடி நல்கும் நன்னெறி 7 : பயனின்றிச் சேர்ப்போர் இழப்பர் – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 6 – பயன்பாடு இல்லாப் பொருளால் என்ன பயன்? – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 7 பயனின்றிச் சேர்ப்போர் இழப்பர் உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும் கெடாஅத நல்லறமும் செய்யார் – கொடாஅது வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட ! உய்த்தீட்டும் தேனீக் கரி. -நாலடியார், செல்வம் நிலையாமை, 10 பொருள்: நல்ல ஆடைகளை உடுத்தாமலும் சுவையான உணவுகளை உண்ணாமலும் வறுமையாளர்களுக்குக் கொடுக்காமலும் அழியாக நல்லறச் செயல்கள் செய்யாமலும் உடலை வருத்திச் செல்வத்தை வெறுமனே சேர்த்து வைப்பவர் அதனை…