செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-1(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் பொழுது (சூன் 2010) செம்மொழிச் செயலாக்கம் குறித்துத் தெரிவித்த கருத்துகள் இப்போதும் பொருந்துபவையே. எனவே, அவற்றை இப்போது வெளியிடுகிறேன். செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-1(2010) ? ஐயா, வணக்கம். உங்களிடம்  தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்தது தொடர்பாகச் சில வினாக்களைத் தொடுத்து விடை கண்டறிந்து வாசகர்களுக்கு அளிக்கலாம் எனக் கருதுகிறோம். # வணக்கம். உங்கள் வாசகர்களுடன் செவ்வி வழித் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு நல்கியமைக்கு நன்றி. பலரும் செம்மொழித் தகுதி தமிழுக்கு இப்பொழுதுதான் கிடைத்துள்ளது போல் தவறாக…

பண்டிதர் தமிழும் பாமரர் தமிழும் வேறுபட்டால் தமிழ் வழக்கற்றுப் போகும்! – பரிதிமாற்கலைஞர்

    தமிழ்மொழியிலோ யார் என்ன செய்தபோதிலும் கேள்விமுறை யில்லை. அவரவர் தத்தமக்குத் தோன்றியவாறும் வாய்க்குவந்தன வந்தவாறும் எழுதுகின்றனர். இவ்வாறு செல்லவிடுதலுங் கேடே. தமிழிலக்கணமுடையார் முற்புகுந்து இதனைச் சிறிது அடக்கியாளலும் வேண்டும். இக்காலத்திற் பண்டிதர் தமிழும் பாமரர் தமிழும் மிகவும் வேறுபடுகின்றன; இருவேறு பாஷைகளெனத் தோன்றுகின்றன. இவ்விரண்டிற்கும் வேறுபாடு மிகுந்துகொண்டேபோமாயின், பண்டிதர் தமிழ் வடமொழியைப் போலப் பேச்சு வழக்கற்று ஏட்டுவழக்காய் மட்டில் நின்றுவிடும்; மற்றுப் பாமரர் தமிழோ தெலுங்குமலையாளங்கள் போல ஒரு வழிமொழியாய் அமைந்துவிடும்.   – பரிதிமாற்கலைஞர்