வெருளி நோய்கள் 1111-1115: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1106-1110: இலக்குவனார் திருவள்ளுவன் தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1111-1115 செந்நெல்லி(Cranberry)குறித்த அளவுகடந்த பேரச்சம் செந்நெல்லி வெருளி.1959 ஆம் ஆண்டு , செந்நெல்லி அறுவடையில் அமினோட்ரியசோல்(aminotriazole) என்ற களைக்கொல்லி கலந்திருப்பதாக அரசாங்க அறிக்கைகள் தெரிவித்தன, இதனால் இவ்வுணவு மீது அச்சம் ஏற்பட்டது. இதனால் வந்நதே செந்நெல்லி வெருளி( Kurberiphobia) 00 செம்மஞ்சள் நிற முடியுடையவர்களைக்கண்டால் ஏற்படும் தேவையற்ற வரம்பு கடந்த பேரச்சம் செம்மஞ்சள் முடியர் வெருளி.Ginger என்பதற்கு இஞ்சி முதலான பொருள்களுடன் மங்கிய செம்மஞ்சள் நிறம் என்றும் பொருள் உண்டு. இங்கே செம்மஞ்சள்…

வெருளி நோய்கள் 1106-1110: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1101-1105:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1106-1110 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 2/5

வெருளி நோய்கள் 1096-1100: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1091-1095 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1096-1100 பில்லி சூனியம் பற்றிய பேரச்சம் சூன்று வெருளிநிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை (அகநானூறு : 381.6)நிழலினை அகழ்ந்து உண்ட, செல்லத் தொலையாத நீண்ட இடத்திலுள்ள என்பது பொருள். சூன்று என்பது அகழ்ந்துஎடுப்பதை தோண்டுவதைக்குறிக்கின்றது. நாலடியாரில்(44) நுங்கு சூன்றிட்டன்ன கண்ணீர்மை என்னும்பொழுது தெளிவாகப் பொருள் புரிகிறது. மண்ணைத் தோண்டி அதில் தகரம் அல்லது ஏதாவது ஒன்றைப் புதைத்துத் தீவினை ஆற்றுவதால் சூனியம் எனப் பெயர் வந்துள்ளது.00 செங்கல் குறித்த வரம்பற்ற பேரச்சம் செங்கல்…

வெருளி நோய்கள் 1086-1090: இலக்குவனார்

(வெருளி நோய்கள் 1081-1085 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1086-1090 சுழல் விளக்கு/சுழல்வொளிர்வு(strobe light) பற்றிய பெருங் கவலையும் பேரச்சமும் சுழல் விளக்கு வெருளி.ஆட்சியாளர்கள், உயர் அலுவர்கள் ஊர்திகளில் சுழல் விளக்குகள் பொருத்தப்படுகின்றன. எனவே, சுழல் விளக்கை அதிகாரத்தின் அறிகுறியாக எண்ணிப் பெரிதும் அச்சப்படுகின்றனர்.00 சுழற் கதவு (revolving door)தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சுழற் கதவு வெருளி.நம்மால் தள்ளி இயக்கக்கூடியதாகவும் தன்னால் இயங்கக்கூடியதாகவும் சுழற்கதவுகள் உள்ளன. இதன் செயல்பாட்டைப்புரிந்து கொள்ளாமல், சிக்கிக் கொள்ள நேரிடும் என அஞ்சுவோர் உள்ளனர்.அரசியலில் சுழற்கதவு இயக்கம் உள்ளது. சட்டத்தை இயற்றுநருக்கும்…

வெருளி நோய்கள் 1081-1085: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1076-1080: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1081-1085 சுவரொட்டி(wallpaper) குறித்த வரம்பற்ற பேரச்சம் சுவரொட்டி வெருளி.சுவரொட்டிகள் மூலம் அரசியல் கருத்துகள், நிகழ்ச்சி விவரங்கள் பயன்படுத்தாலும், எழுச்சி முழக்கங்களும் பரப்பப்படுகின்றன. எனினும் சுவெராட்டிகள் மூலம் எதிரான கருத்துகளும் பரப்பப்படுவதால் இதனால் அச்சமும் எரிச்சலும் அடைந்து காரணமற்ற வரம்பு கடந்த பேரச்சத்திற்கு ஆளாவோர் உள்ளனர்.Tapetsaria என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் சுவரொட்டி எனப் பொருள்.00 சுவர் குறித்த வரம்பற்ற பேரச்சம் சுவர் வெருளி.சுவர் இடிந்து விழுந்து மரணம், படுகாயம் முதலானவை நேர்ந்த செய்திகளைப் படித்தவர்கள் பாழடைந்த சுவர்…

வெருளி நோய்கள் 1061-1065: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1055-1060: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1061-1065 சிறைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் சிறை வெருளி.சிறைவாசிகளுக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிந்து விடுமோ என்ற பேரச்சம் வரும்.செல்வாக்கு உள்ளவர்க்கு ஒரு நிலைப்பாடு இல்லாதவர்க்கு ஒரு நிலைப்பாடு என நிலவுவதால், விசாரணையில் உள்ள கைதிகளுக்கும் குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கும் சிறைபற்றிய அச்சம் மிகுதியாகின்றது. சட்டப்படியான குற்றம் புரியாதவர்களும் சிறைபற்றிய செய்திகளையும் கதைகளையும் படிப்பதாலும் தொலைக்காட்சி, திரைக்காட்சிகளில் காண்பதாலும் சிறைகள்பற்றிய பேரச்சம் வருகிறது.carcer என்னும் இலத்தீன் சொல்லிற்குச் சிறை எனப் பொருள்.00 சிற்றுண்டிகள் விற்பனையகம் குறித்த காரணமற்ற…

வெருளி நோய்கள் 1051-1055: இலக்குவனார் திருவள்ளுவன் 

(வெருளி நோய்கள் 1046-1050) வெருளி நோய்கள் 1051-1055 1051. சிறுத்தைப் புலி வெருளி – Gatopardophobia/Leopardaliphobia/ Pardalophobia/ Iagouarophobia  சிறுத்தைப்புலி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சிறுத்தைப்புலி வெருளி. Gatopardo என்னும் இசுபானியச் சொல்லின் பொருள் சிறுத்தைப்புலி. Iagouaro என்றால் jaguar  எனப் பொருள்.  மாயன் மொழியில் jaguar என்றால் ஒரே பாய்ச்சலில் கொல்லும் விலங்கு எனப் பொருள். காண்க: சிவிங்கிப்புலி வெருளி (Acinonyxphobia/Panthiraphobia) 00 1052. சிற்றின நாய் வெருளி- Chihuahuaphobia சிறிய அளவிலே வளரும் சிற்றின நாயைக் கண்டு ஏற்படும் பேரச்சம் சிற்றின…

வெருளி நோய்கள் 1031-1035: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1026-1030: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1031-1035 சிம்சு காணாட்ட குறித்த வரம்பற்ற பேரச்சம் சிம்சு காணாட்ட வெருளி.சிம்சு(The Sims) என்பது 2000 ஆம்ஆண்டு மேக்குசிசு(Maxis) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, மின்னணுக் கலைகள் நிறுவனத்தால்(Electronic Arts) வெளியிடப்பட்ட குமுக உருவகப்படுத்தும்காணொளி ஆட்டமாகும்.இது பல வரிசைத்தாெடராக வந்து கொண்டுள்ளது. இவ்வாட்டத்தை ஆடுபவர்களும் காண்பவர்களும்தூய்மைக்கேடு தொடர்பான பொதுக்கழிப்பறையைப் பயன்படுத்தல் போன்ற வற்றிற்குப்பேரச்சம் கொள்கின்றனர்.காணாட்ட வெருளி உள்ளவர்களுக்குச்சிம்சு காணாடட வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 சிம்பசன் என்னும் அசைவூட்டக் கதை மாந்தர் குறித்த வரம்பற்ற பேரச்சம் சிம்பசன் வெருளி.அசைவூட்டக்…

வெருளி நோய்கள் 1026-1030: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1021-1025: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1026-1030 சிதை பொருள்(decaying matter) குறித்த வரம்பற்ற பேரச்சம் சிதை பொருள் வெருளி.அழுகும் பொருள்களால் ஏற்படும் தீய நாற்றம்,நோய் முதலியவற்றால் பேரச்சம் கொள்வர்.sep என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சிதைவு/அழுகிப்போதல்.00 குழந்தை உருச்சிதைந்து பிறக்கும், கோரமாகப் பிறக்கும், அருவருப்பான தோற்றத்தில் பிறக்கும் என்றெல்லாம் குழந்தைப் பிறப்பு குறித்து அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் கொள்வது சிதைவுரு வெருளி.இது மகப்பேறு வெருளியுடன் (Lockiophobia/Tokophobia/Tocophobia/ Maieusiophobia/ Parturiphobia தொடர்புடையது.பழங்கிரேக்கத்தில் téras என்றால் கோர உரு எனப் பொருள். இச்சொல்லில் இருந்து…

வெருளி நோய்கள் 1016-1020: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1011-1015 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1016-1020 சாம்பல் நிறம் தொடர்பானவற்றின் மீது ஏற்படும் வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் சாம்பல்நிற வெருளிசாம்பல் நிறம் நடுவுநிலைமை, ஒத்துப்போதல், சலிப்பு, ஐயப்பாடு, முதுமை, புறக்கணிப்பு, நாணம் ஆகியவற்றுடன் தொடர்புடைய குறியீடாக விளங்குகிறது.glauco என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சாம்பல்நிறம்.00 தனித்திராமல் பிறரைச் சார்ந்திருக்கும் சார்பு(dependence on others) நிலை குறித்த வரம்பற்ற பேரச்சம் சார்பு வெருளி.தற்சார்பின்றிப் பிறரை அண்டியிருத்தல் உரிய செயலைக் குறித்த காலத்தில் முடிப்பது குறித்த கவலையை உருவாக்கும். சார்தலுக்குரியவர் எதிர்பார்க்கும் உதவியைச் செய்யாமல்…

வெருளி நோய்கள் 1001-1005: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 996-1000: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1001-1005 சனவரி 16 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 16 வெருளி.சனவரி 16 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 16 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.16 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 16 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.00 சனவரி 17 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 17 வெருளி.சனவரி 17 ஆம் நாள் நிகழ்ந்த துயர…

வெருளி நோய்கள் 996-1000: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 991-995 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 996-1000 சனவரி 11 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 11 வெருளி.சனவரி 11 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 11 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.11ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 11 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.00 சனவரி 12 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 12 வெருளி.சனவரி 12 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை…

1 2 24