வெருளி நோய்கள் 991-995: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய் 986-990 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 991-995 சனவரி 3 ஆம் நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் சனவரி 3 வெருளி.சனவரி 3 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 3 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.3 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 3 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.00 சனவரி 4 ஆம் நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் சனவரி 4 வெருளி.சனவரி 4 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி…

வெருளி நோய்கள் 986-990: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 981-985: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 986-990 பனிச் சறுக்கு வண்டி(Sledge/Sleigh)குறித்த அளவுகடந்த பேரச்சம் சறுக்கு வண்டி வெருளி.உறைபனி நிலப்பரப்பில் பொருள்களையும் மக்களையும் சுமந்து செல்லும் குதிரைகள் அல்லது நாய்களால் இழுத்துச் செல்லப்படும் சக்கரங்கள் இல்லாத சறுக்குக்கட்டைகள் பொருத்திய வண்டியே பனிச் சறுக்கு வண்டி.பெரும்பாலும் ஊர்திப்பயணம் மேற்கொள்வோருக்கு நேர்ச்சி(விபத்து) குறித்துப் பேரச்சம் உள்ளமைபோல் பனிச்சறுக்கு வண்டிப்பயணம் மீதும் பேரச்சம் வருகிறது.00 ஆடவா் பனிச்சறுக்காட்டப் போட்டியைப்(competitive male figure skating) பார்க்குமாறு கட்டாயப்படுத்துவதால் ஏற்படும் அளவுகடந்த வேறுப்பும் பேரச்சமும் சறுக்குப் போட்டி வெருளி.சறுக்குருளை மீது…

வெருளி நோய்கள் 981-985: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 976-980: இலக்குவனார் திருவள்ளுவன் தொடர்ச்சி) வெருளி நோய்கள் 981-985 981. சல வெருளி-Hydrophobia நாய்க்கடிக்கு உள்ளானவர்களுக்குத் தண்ணீரைக் கண்டால் ஏற்படும் இயல்பிற்கு மீறிய வெறுப்பு அல்லது பேரச்சம் சல வெருளி / வெறிநாய்க்கடி வெருளி.இதனைச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி சல பய ரோகம் என்று குறிக்கிறது.சல சல என்று ஓடிச் செல்வதால் நீருக்குச் சலம் எனப் பெயர் வந்ததென்பர் அறிஞர்கள். இதில் கிரந்த எழுத்தைப் பயன்படுத்தி ஒலித்ததால், தமிழ்ச்சொல்லல்ல என்ற எண்ணம் வந்து விட்டது.தண் அம் துவர் பல ஊட்டிச் சலம்…

வெருளி நோய்கள் 976-980: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 971-975: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 976-980 சமையல் மேசை(kitchen table) குறித்த வரம்பற்ற பேரச்சம் சமையல் மேசை வெருளி.சமையல் வெருளி உள்ளவர்களுக்குச் சமையல் மேசை வெருளி வர வாய்ப்பு உள்ளது.00 சமைப்பது மீதான அளவுகடந்த வெறுப்பும் தேவையற்ற பேரச்சமும் சமையல் வெருளி.சமையல் வெருளியையும் உணவு வெருளி(cibophobia)யுடன் சேர்த்துக் கொள்ளலாம்.சில வகை உணவுமீது வெறுப்பு வரும்பொழுது அவற்றைச் சமைப்பதிலும் வெறுப்பும் பேரச்சமும் வருகிறது. சிலர் சமைக்கத் தொடங்கிய புதிதில் காய்கனி நறுக்குகையில் கையில் காயம்பட்டிருப்பர். இதனால ஏற்பட்ட அச்சம் ஆழமாகப் பதிந்து சமையல்…

வெருளி நோய்கள் 966-970: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 961-965: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 966-970 சட்டை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சட்டை வெருளி.பெளகமிசோ – Poukamiso என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சட்டை.ஆடை வெருளி உள்ளவர்களுக்குச் சட்டை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 சதுரம் குறித்த வரம்பற்ற பேரச்சம் சதுர வெருளி.சதுரமான கட்டடங்கள், சதுரமான அரங்குகள், சதுரமான அமைப்புகள் முதலியவை மீதும் தேவையற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.சிலர் சதுரம் என்பதை வடசொல்லாகக் கருதுகின்றனர். எனவே, அதனை நாற்கரம் என்பர். ஆனால், வட்டம் என்பது போன்றே சதுரம் என்பதும் தூய தென்சொல்…

வெருளி நோய்கள் 961-965: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 956-960: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 961-965 சங்கடம் குறித்த வரம்பற்ற பேரச்சம் சங்கட வெருளி.சங்கடங்கள் (Embarrassment) மனஅளவிலும் குமுக அளவிலும் பல தீமைகளை ஏற்படுத்தும். அவை மனச்சோர்வு, பதற்றம், அவமானம், தன்மதிப்புக் குறைவு, மற்றவர்களைப் பற்றிய பயம்,தோல்வி பயம் போன்ற உணர்வுகளைத் தூண்டும். மேலும் சில சமயங்களில், குமுகத் தொடர்புகளைத் தவிர்ப்பதற்கும், செயல்திறன் வீழ்ச்சிக்கும் வழிவகுத்து, தனிப்பட்ட/கல்வி/தொழில்முறை வாழ்க்கையைப் பாதிக்கும். எனவே, சங்கடங்கள் நேரும்பொழுதோ சங்கடங்கள் வரும் என எதிர்நோக்கும் பொழுதோ வெருளிக்கு ஆளாகின்றனர். இறையன்பர்கள் சங்கடங்களால் வரும் தீமைகளைத் தடுக்கும்…

வெருளி நோய்கள் 956-960: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 951-955: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 956-960 கடைப்பொருள் தள்ளி / சகடி (shopping cart) குறித்த வரம்பற்ற பேரச்சம் சகடி வெருளி.குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் தள்ளுவண்டியுடன்(stroller) குழப்பம் வரக்கூடாது என்பதற்காக இங்கே தள்ளுவண்டி எனப் பயன்படுத்தவில்லை.வண்டி, உருடை, ஒழுகை, சகடம், சகடி முதலானவை வண்டியைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள். சகடி என்னும் சொல்லை நாம் இப்பொழுது பயன்படுத்துவதில்லை. எனவே கடைக்குள் பொருள்களை எடுத்து வருவதற்காகப் பயன்படுத்தப்படும சக்கரங்கள் உள்ள தள்ளுவண்டியைக் கடைச்சகடி என்றும் சுருக்கமாகச் சகடி என்றும் குறிக்கலாம்.00 சக்கர நாற்காலி…

வெருளி நோய்கள் 951-955: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 951-955: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 951-955 கோர உருவன் என்னும் அசைவூட்டப் படப்பாத்திரத்தின் மீதான காரணமற்ற பேரச்சமே கோரன் வெருளி.சிறு கோர உரு என்னும் பொருளிலான Pocket Monsters என்பதன் சுருக்க வடிவமே போகெமன். அல்லது பாகெமன். கோர உருவுடையவன் என்ற பொருளில் கோரன் எனலாம்.00 கோழைநாய் வீரன் என்னும் அசைவூட்டப் பாத்திரம் குறித்த வரம்பற்ற பேரச்சம் கோழைநாய் வீரன் வெருளி.கோழை நாய் வீரன்(Courage the Cowardly Dog) என்பது அமெரிக்கத் திகில் நகைச்சுவை தொலைக்காடசித் தொடர். தில்வொர்த்து(John R. Dilworth)…

வெருளி நோய்கள் 946-950: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 941-945:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 946-950 கோவேறு கழுதை குறித்த அளவுகடந்த பேரச்சம் கோவேறு கழுதை வெருளி.00 கோழியை பார்ததால் ஏற்படும் தேவையற்ற பேரச்சம் கோழி வெருளி.கோழி இறைச்சி தொடர்பான அளவுகடந்த பேரச்சமும் கோழி வெருளியுள் அடங்கும். இதனைத் தனியே கோழி இறைச்சி வெருளி எனச் சொல்ல வேண்டா.alektor என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சேவல்.00 கோபுரம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கோபுர வெருளி.கோபுரத்தின் தோற்றம் உயரம் குறித்துக் காரணமின்றி அளவு கடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.00 கோப்பு தடுப்பறை அல்லது…

வெருளி நோய்கள் 941-945: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 936-940:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 941-945 941. கோடை வெருளி – Aestaphobia / Therophobia / Aestophobia கோடை குறித்த பெருங்கவலையும் பேரச்சமும் கோடை வெருளி.கோடைக்காலத்தில் வரும் உடலியல் சார்பான தொந்தரவு குறித்து ஏற்படும் பெருங்கவலைகளும் பேரச்சமும் கோடை வெருளியை உருவாக்குகிறது.கோடையில் வரும் வெப்பத்தாலும் வியர்க்குரு, வேனல் கட்டி, பூஞ்சைத் தொற்று, நீர்க்கடுப்பு, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, வெஞ்சுரம், சீதபேதி முதலான வெப்பம் சார்ந்த நோய்களாலும் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். கோடையில் வரும் விடுமுறைகளில் பிள்ளைகளைச் சமாளிக்க முடியாது என்று…

வெருளி நோய்கள் 936-940: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 931-935: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 936-940 கொல்லுவது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கொலை வெருளி.காண்க: கொலைகாரன் வெருளி(Foniasophobia)00 கொல்லைப்புறம்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கொல்லைப்புற வெருளி.zhoyun என்றால் கொல்லைப்புறம்.00 கொழுந்தனார் மீதான அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் கொழுந்தனார் வெருளி.கொழுந்தனாரின் பதவி நிலை, செல்வ நிலை போன்றவற்றாலும் தன் கணவரைச் சார்ந்து நின்றாலும் உதவிகள் வேண்டினாலும் தன் உடன்பிறந்தாளைச் சரியாகப் பேணாவிட்டாலும் உதவ விரும்பாத பெண்களுக்கு வெருளி வருகிறது.yifu என்னும் சீனச் சொல்லின் பொருள் கொழுந்தனார்.00 வீட்டில் அல்லது வெளியில் கொள்ளையடிக்கப்படுவது குறித்த அளவுகடந்த…

வெருளி நோய்கள் 931-935: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 926-930 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 931-935 931. கொண்டாட்ட வெருளி – Heortophobia கொண்டாட்டம் குறித்த வரம்பு கடந்த பேரச்சம் கொண்டாட்ட வெருளி Heorto என்னும் சொல்லின் மூலக் கிரேக்கச்சொல்லின் பொருள் விடுமுறை. விடுமுறை நாள் கொண்டாட்ட ங்களை இங்கேகுறிக்கிறது. 00 932. கொதிசாறு வெருளி – Soupaphobia கொதிசாறு(Soup) குறித்த அளவற்ற பேரச்சம் கொதிசாறு வெருளி. காய்கனிகளிலிருந்து அல்லது தக்காளி, முருங்கைக்காய் போன்ற குறிப்பிட்ட காய்கனியிலிருந்து அல்லது எலும்பிலிருந்து அல்லது பிற உண்பொருளிலிருந்து உருவாக்கப்படும் அனைத்துவகை கொதி சாறு அல்லது…