வெருளி நோய்கள் 1171-1175 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1166-1170 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1171-1175 தண்ணீர்ப்பூசணி(Watermelon) பற்றிய அளவு கடந்த பேரச்சம் தண்ணீர்ப்பூசணி வெருளி.தண்ணீர்ப்பூசணி, ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரமாகும். இதன் பழம் தர்ப்பூசணிப் பழம், வத்தகைப்பழம், கோசாப் பழம், தர்பீசு, தண்ணீர்ப் பழம் எனவும் அழைக்கப்படும். பூசணியைப் பூசுனி, பூசனி என்றும் குறிப்பிடுவர்.00 தந்தையுடன் பிறந்த தமக்கை, தங்கை ஆகிய அத்தைமார் தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தந்தை உடன்பிறந்தாள் வெருளி.அத்தை என்று சொன்னால், தாயுடன் பிறந்த உடன்பிறந்தவரின் மனைவி என்றும் பொருள் கொள்ளப்படும். எனவே,…
