தமிழரின் கார்த்திகை ஒளி விழாவே ஆரியத் தீபாவளியாக மாற்றப்பட்டது! “திரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி!” (தினச்செய்தி 27.10.2019) என்றும் “தமிழ்நாட்டில் தீபாவளி உருவான வரலாறு!”(அறம் இணைய இதழ் 30.10.2024) என்றும் முன்னரே எழுதியுள்ளேன். தீபாவளி குறித்த பெரியாரின் கட்டுரை, பிற இதழில் வந்தவை குறித்தும் அகரமுதல இதழில் வெளியிட்டுள்ளேன். இருப்பினும் தீபாவளி குறித்து உயர்வாகவே எழுதுவோர் பெருகி வருவதால் மீண்டும் எழுத வேண்டியுள்ளது.கடவுளுக்கு உருவம் இல்லை என்பதே தொன்மையான கருத்து. அருவமான கடவுளை வழிபடுவதற்காக ஒளி வழிபாட்டைப் பின்பற்றியிருக்கிறார்கள். மரபு வழியிலான ஒளி…