இந்துத்துவா வெறிச்செயலுக்கு வலுசேர்க்கும் நடிகர் கமலஃகாசன்

கருத்துரிமைக்கு எதிரான இந்துத்துவா வெறிச்செயலுக்கு வலுசேர்க்கும் கருத்தே, நடிகர் கமலஃகாசனின் கருத்து!   தமிழ்க் கலை இலக்கியப்பேரவை பொதுச்செயலாளர்  தோழர் நா. வைகறை அறிக்கை!     “நான் தேசிய விருதைத் திருப்பித் தர மாட்டேன்; விருதுகளைத் திருப்பித் தருவதன் மூலம் அரசாங்கத்தையும், நம்மை மதித்து விருது தந்து நேசிக்கும் மக்களையும் நாம் அவமதிப்பதாய் அமையும்.விருதுகளைத் திருப்பித் தருவது என்பது ஒரு பயனற்ற செயல். விருதுகளைத் திருப்பித் தருவதால் எந்த ஒரு தாக்கமும் ஏற்படாது” என்று 03.11.2015 அன்று, ஐதராபாத்தில் அளித்த தனது பேட்டியில் நடிகர் கமலஃகாசன் கூறியுள்ளார்.   இஃது ஒருவகையில் இந்துத்துவா மதவாத பா.ச.க. அரசுக்கு ஆதரவான கருத்தாகும்.  …

இடித்தெழும் கவிதைக் கீற்று! – சந்தர் சுப்பிரமணியன்

உள்ள வெள்ளம்   ஊற்றென உளத்துள் தோன்றும் .. உணர்வுகள் தொண்டை சேருங் காற்றினை உதறச் செய்து .. கவிதையாய் உதட்டுக் கீனும்; ஏற்புடைத் தரத்தில் உண்டா .. இலக்கணம் சரியா என்று சாற்றிடும் போதென் நெஞ்சம் .. சரிவரப் பார்ப்ப தில்லை (1) மீட்டிடின் நீளும் நாதம் .. முதற்செவி சேரும் முன்னர் ஊட்டிடும் விரலி னூடே .. உணர்வினால் உள்ளம் சேர்ந்து காட்டுமோர் மோக மாயை, .. காண்கையில் மயங்கும் போது கூட்டியோ குறைத்தோ பாட்டைக் .. கொன்றிடல் இயல்பு தானோ?…