தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙு) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ) பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப்பின், ஆட்சியாளரின் பதவியை நிலைப்படுத்திக் கொள்வதற்கான விட்டுக் கொடுத்தல்களும் ஒத்துப்போதல்களும் எதிர்பார்த்த தமிழ்ப் பயன்களைத் தரவில்லை. இதனால் பேராசிரியர் இலக்குவனார் வேதனை உற்றார். உசுமானியாப் பல்கலைக்கழகத்திலோ, தமிழில் இருந்து பிறந்தனவே தெலுங்கு முதலான தமிழ்க்குடும்ப மொழிகள் என்னும் உண்மையை ஏற்காத தெலுங்குத் துறையினர் தெலுங்கின் மகள் தமிழ் என்றும் தெலுங்கின் தங்கை தமிழ் என்றும் உண்மைக்கு மாறான கருத்துகளைப் பரப்பி வந்தனர். அவர்களிடம் தமிழின் தொன்மையையும் தாய்மையையும் விளக்கினார்….

திராவிடத்தைப் பழிப்போர் தம்மையே பழிப்போராவர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

  திராவிடத்தைப் பழிப்போர் தம்மையே பழிப்போராவர்!  “தமிழர்களின் தேசியமொழி தமிழ்தான். தமிழ்நாட்டில் தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் அளித்தல் வேண்டும்.”  தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனாரால் முன்னெடுக்கப்பட்ட இக்கருத்திற்கு மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. அதே நேரம்,  தமிழ்த்தேசியம் பேசுவதாக எண்ணும் சிலர், தமிழை உயர்த்துவதாக எண்ணிக்கொண்டு திராவிடத்தைப்பற்றி இழிவாகச்சொல்வது நம்மை நாமே தாழ்த்துவதாகும்.   திராவிடம் என்பது தமிழின் பெயரன்று. ஆனால் தமிழ்க்குடும்ப மொழிகளைக் குறிப்பிடுவதற்கு அடையாளமாக வந்த பெயர்.  ஆரியம் வந்த பொழுது அதற்கு  எதிராகத் தனிமையில் தமிழ் மட்டுமல்லாமல்,  அதன் மொழிக்குடும்பமே இணைந்திருக்க…

தன்னேரிலாத தமிழ் – க.தில்லைக்குமரன்

தன்னேரிலாத தமிழ் “ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி யேங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்”                   – தண்டியலங்காரவுரை மேற்கோள்   4000 ஆண்டுகளுக்கு முன் நாவலந் தேயமாகிய ஆதி இந்தியாவின் (பாக்கிசுதானும் சேர்த்து) பெரும்பாலானப் பகுதிகளில் தொல்தமிழ்க் குடும்பமொழி பேசப்பட்டு வந்ததற்குச் சான்றுகள் கிடைத்து வருகின்றன. பலுசிசுத்தான் பகுதியில் பிராகூயி என்கிற தமிழ்க்குடும்பமொழி பேசப்பட்டு வருவது இதற்குச் சான்று. கி.மு 1900-க்குப் பின்பு ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து (கசாக்சுதான்) சிறிது சிறிதாக அரப்பாவில் (http://en.wikipedia.org/wiki/Harappa) குடியேறத்…