சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- இலக்குவனார் திருவள்ளுவன்
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! அன்புமிகு சான்றோர் பேரவை உறுப்பினர்களுக்கும் நிகழ்ச்சியினை நேரடியாக கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் இப்பதிவொலி வழியாக கேட்க இருப்பவர்களுக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அறிமுக உரையாற்றி இந்நிகழ்ச்சியினை எனக்கு அளித்த அரவிந்தன் அவர்களுக்கும் என் வணக்கமும் நன்றியும். தலைப்பைக் கேட்டுச் சிலருக்கு ஆனா உரூனா ஐயாவுடைய தமிழ்ச் சான்றோர் பேரவை இந்த தலைப்பிலா நிகழ்ச்சி நடத்துகிறது என்று எண்ணலாம். “சமற்கிருதத்திற்கு மிகக் கூடுதல் நிதி ஒதுக்கீடும் பிற மொழிகளுக்கு மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடும்” என்றுதான் பேசச் சொன்னார்கள். இரண்டு்ம் ஒன்றுதான். என்று…
