க0. தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்குமா?-வி.பொ.பழனிவேலனார்
(௯. பிற மொழிக் கலப்பால் தமிழ் வளருமா?-வி.பொ.பழனிவேலனார்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௰. தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்குமா? க. தமிழ் மொழியுடன் வேற்றுமொழிச் சொற்கள் பெருமளவு கலக்கப்பட்டு பல்லாயிரம் தமிழ்ச்சொற்கள் வழக்கொழிந்துவிட்டன. உ. தமிழ்மக்கள் பேச்சிலும், எழுத்திலும் தமிழ்ச்சொற்களைக் காண்பது அரிதாகிவிட்டது.௩. தமிழ்நாட்டில் வாழும் தமிழ்மக்களின் பெயர்கள் தமிழாக இல்லை.௪. தமிழ்நாட்டில் உள்ள கடைகள், தொழிலகங்களின் பெயர்கள் தமிழ்மொழியில் எழுதப்படவில்லை.ரு. தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்கள் பல தமிழல்ல. தமிழில் எழுதியுள்ள பெயர்களும் பிழைபட எழுதப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுத் தெருக்களில் தமிழ் வழங்கவில்லை.எ. தமிழில் இப்பொழுது இந்திச் சொற்கள்…