காற்று இல்லா வானத்தைஅறிந்திருந்த பழந்தமிழர் – இலக்குவனார் திருவள்ளுவன்

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 20 காற்று இல்லா வானத்தைஅறிந்திருந்த பழந்தமிழர் நளி இரு முந்நீர் ஏணி ஆக,வளி இடை வழங்கா வானம் சூடியமண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்,முரசு முழங்கு தானை மூவர் (வெள்ளைக்குடி நாகனார், புறநானூறு, பாடல் 35, 1- 4) புலவர் வெள்ளைக்குடி நாகனார் சோழ வேந்தன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் வறட்சியில் வாடும் மக்களின் நன்மை கருதி வரியைத் தள்ளுபடி செய்யுமாறு வேண்டிய பாடல். இதற்கிணங்க வேந்தரும் வரியைத் தள்ளுபடி செய்தார். இப்பாடல் உழவின் சிறப்பையும் பல…

திராவிடம் என்பது பிந்தையது – பேரா.சி.இலக்குவனார்

தமிழ் என்னும் சொல் தோன்றிய காலத்தது;  திராவிடம் என்பது பிந்தையது.    இந்திய மொழிகளை ஆரியக் குடும்ப மொழிகள் என்றும் தமிழ்க் குடும்ப மொழிகள் என்றும் இருவேறு இனமாகப் பிரித்துள்ளனர் மொழியாராய்ச்சியாளர்கள்.   தமிழ்க்குடும்ப மொழிகளைத் திராவிடக் குடும்ப மொழிகள் என்பர்.   திராவிடம் என்ற சொல்லிலிருந்தே தமிழ் என்ற சொல் தோன்றியது என்ற கருத்து பிழைபட்டது என்று நிலைநாட்டப்பட்டுவிட்டது.   கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில்  தமிழ் எனும் சொல் பயின்றுள்ளது.   திராவிடம் என்ற சொல்லின் தோற்றம் கி.பி. மூன்றாம்…