(௰. தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்குமா?-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௰க. தமிழ் கற்பிக்க வேண்டிய முறை இன்று தமிழ்நாட்டுத் தொடக்கப் பள்ளிகளில் தமிழ்ப்பாடம் கற்பிக்கும் முறை தவறானது.  ஆங்கிலம் கற்பிக்கும் முறையைப் பின்பற்றியே தமிழும் கற்பிக்கப்படுகிறது. ஆனால், பண்டைக்காலத்தில் தமிழ் கற்பிக்கக் கையாண்ட முறையே தமிழைப் பொறுத்தவரை சரியானதாகும். அம்முறையில் கற்றவர்தாம் பண்டைய புலவர் பெருமக்கள். பிழையின்றி எழுதவும், பேசவும், அம்முறை பெரிதும் உதவியது. ஆனால், இன்றைய முறையில் தமிழ் கற்றவர், புலமைப்பட்டம் பெற்றிருந்தும் பிழையின்றி எழுதத் திணறுகின்றனர். தமிழ் கற்பிக்க, எழுத்துக் கூட்டிப் படிக்கும் முறையே …