தமிழ் இன்றும் என்றும் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் இன்றும் என்றும் – இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் மொழி தமிழ்நாட்டின் அனைத்து நிலைகளிலும் நிலைத்து நிற்கும் மொழியாக இருக்க வேண்டுமென்பது நம் இன்றைய கனவு மட்டும் அல்ல; பல நூற்றாண்டுக் கனவாகும். ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் ஊடக மொழியாகவும் வேலைவாய்ப்பு மொழியாகவும் வணிக மொழியாகவும் என எல்லா இடங்களிலும் தமிழே இருக்க வேண்டும் எனத் தமிழ் அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் மட்டுமல்ல, அரசியல்வாதிகளும் பேசியும் எழுதியும் வருகின்றனர். ஆனால், இத்தகைய நிலையை எட்டும் காலம்…
சீர்திருத்த முயற்சியில் இருந்து தமிழைக் காப்பது முதன்மையான கடமை
இன்றையநாளில் தமிழை வளம் படுத்துவோமெனத் தலைப்படும் ஒரு சிலர் தமிழ் எழுத்திலக்கணத்தில் குறைபாடுகள் மலிந்திருப்பதாகவும், அவற்றை அகற்றுதல் மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாததெனவும் கூறுகின்றனர். நூலகவழக்கிலிருக்கும் மொழிகளையும் அவற்றின் எழுத்திலக்கணங்களையும் இக்கொள்கையினர் நடுநின்று ஆய்வரெனில், பிற மொழிகளிற் காணும் குறைபாடுகள் சொல்லிறந்தனவென்றும், தமிழ் மொழியில் அத்துணை குறைபாடுகள் இல்லை என்றும் காண்பர். கார்மர் பிரபு (Lord Cormer) என்ற ஆங்கிலப் புலவர் தம் மொழியின் எழுத்திலக்கணத்திற் காணப்பெறும் குறைகள் சிலவற்றைத் தொகுத்து, அவை புலனாகுமாறு இக்கவியில் விளக்குகின்றனர். “In the English tongue…
நற்றமிழாலே உயர்வோம்! – யாழ்ப்பாவாணன்
நாம் பாடுவோம் தமிழைப் பாடுவோம் நாம் தேடுவோம் நற்றமிழைத் தேடுவோம் நாளை நம்மக்கள் தூயதமிழைப் பேணவே! நாம் படிப்போம் தமிழைப் படிப்போம் நாம் எழுதுவோம் நற்றமிழில் எழுதுவோம் நாளை நம்மக்கள் தூயதமிழை வெளிப்படுத்தவே! நாம் கேட்போம் தமிழைக் கேட்போம் நாம் சொல்லுவோம் நற்றமிழில் சொல்லுவோம் நாளை நம்மக்கள் தூயதமிழை வாழவைக்கவே! நாம் ஆடுவோம் தமிழைப்பாடி ஆடுவோம் நாம் பாடுவோம் நற்றமிழில் பாடுவோம் நாளை நம்மக்கள் தூயதமிழுக்கு உயிரூட்டவே! நாம் நிமிர்வோம் தமிழாலே நிமிர்வோம் நாம் உயர்வோம் நற்றமிழாலே உயர்வோம் நாளை நம்முலகம் தூயதமிழைப் பேசும்வேளை!…
தமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே – கவிதைப்போட்டி
கவிதைப்போட்டி தலைப்பு: தமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே கடைசி நாள்: கார்த்திகை 14, 2045 / 30.11.2014
உலகளாவிய தமிழ்க்கல்வி – 1 : இலக்குவனார் திருவள்ளுவன்
அதுதான் என் ஆசை-தமிழ் அன்னை அவள் முன்னைபோலத் தன்னைத்தானே ஆளவேண்டும். என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.தமிழறிஞர் ஒவ்வொருவரின் ஆசையும் இதுதான். நாம் தமிழே கற்காமல் தமிழன்னையைப் புறக்கணிப்பின் இந்நிலையை எய்த முடியாதல்லவா? எனவே, தமிழன்னை ஆள நாம் அனைவரும் உலகில் எங்கிருந்தாலும் தமிழ் கற்றவர்களாகத் திகழ வேண்டும்.பல்வேறுநாடுகளில் தமிழ்க்கல்வி பல நிலைகளில் உள்ளது. வலைத்தளங்கள், வலைப்பூக்கள், முகநூல்கள்என இணைய வழியாகத் தமிழ் கற்பிக்கும் தளங்களும் உள்ளன.தமிழ் கற்பிக்கும் நூல்களை வாங்குவதற்கான விவரத் தளங்களும் உள்ளன. தமிழ் கற்பிக்கும் இணையத் தளங்களை அறிமுகப்படுத்துவதும்…
புதிய அரசிற்கு வாழ்த்துகள்!
எளிமையின் காரணமாக, இரண்டாம் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அரசிற்கு வாழ்த்துகள்! தங்கள் தலைவியின் நிழலவையாகத்தான் இந்த அரசை நடத்துவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! எனினும் தங்கள் தலைவி, தமிழ்நலச்செயல்களில் ஈடுபட்டதை நிறுத்தாமல் தொடர வேண்டும். தமிழ் ஈழம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் முன்னிலும் ஈடுபாடு காட்ட வேண்டும். இத்தகைய செயல்கள்தாம் அவருக்கு உலக அளவில் பரிவான போக்கை அமைத்துத்தந்ததை உணர வேண்டும். அதே நேரம் தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறைக் கொட்டடியிலும் கொடுமையாக ஈழத்தமிழர்கள்…
பயன்பாட்டுப் பார்வையில் துறைதோறும் தமிழ் – பன்னாட்டுக் கருத்தரங்கம்
சென்னை எத்திராசு மகளிர் கல்லூரி (தன்னாட்சி) கல்லூரியில் தமிழ் முதுகலை தொடங்கப்பெற்ற வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, ‘பயன்பாட்டுப் பார்வையில்துறைதோறும் தமிழ்’ என்னும் தலைப்பில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நிதிஉதவியுடன் பன்னாட்டுக் கருதரங்கம் ஒன்று நடைபெற உள்ளது; எதிர்வரும் கார்த்திகை 9,10, 2045 / நவம்பர் மாதம் 25, 26 ஆகிய நாள்களில் சென்னையில் நடைபெறும். இதுதொடர்பாக கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியை முனைவர். ந.அங்கயற்கண்ணி, பேராசிரியை முனைவர். சு. புவனேசுவரி, பேராசிரியை முனைவர்.பா. கெளசல்யா ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “எத்திராசு மகளிர் கல்லூரியின்…
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே! -முனைவர் மறைமலை இலக்குவனார்
’இந்திய இறையாண்மை’ இதுதான் துன்பக் கடலில் தத்தளிக்கும் இந்திய மீனவர்கள் வலைவீசிப் பிடிக்கும் சிங்களப் படையினர் பிடிபட்டால் சிறைவாசம் தப்பிக்கமுயன்றால் துப்பாக்கிச் சூடு வேடிக்கை பார்ப்பதற்குக் கடலோரத்தில் காவற்படை! எதிர்த்துப் பேசாதீர்கள் ’இந்திய இறையாண்மை’ இதுதான் என்று புரிந்துகொள்ளுங்கள்! அரசியற்சட்ட அமைப்பில் அறிந்தேற்புப் பெற்றவை அட்டவணைப் படுத்தப்பட்டவை இருபத்துமூன்று மொழிகள்! அந்த வாய்ப்பும் அற்றவை பல நூறுமொழிகள்! ஆட்சி புரியும் நல்வாய்ப்பு ஒரே ஒரு மொழிக்குத்தான்! தொன்மையான மொழிகள் இரண்டே இரண்டு கொண்டாடுவதற்குச் சமற்கிருதம் திண்டாடுவதற்குத் தமிழ்! எதிர்த்துப் பேசாதீர்கள் ’இந்திய இறையாண்மை’ இதுதான்…
அமிழ்தைவிட அடுப்புக்கரி சுவைக்குமோ – கவிஞர் செ.சீனி நைனா முகம்மது
தமிழனென்றால் பிறமொழிதான் பிடிக்குமோ – பிள்ளை தாயைவிட்டு வேறொருத்தி தாள்பணிந்து கிடக்குமோ? அமிழ்தைவிட அடுப்புக்கரி சுவைக்குமோ – அட அடுத்தவரின் சரக்கினில்தான் இவனுக்கென்றும் மயக்கமோ! பிழைப்புக்காகத் தமிழுங்கொஞ்சம் படிக்கிறான் – நல்ல பெரியவேலை கிடைக்கும்வரை திறமையாக நடிக்கிறான்! குழப்பம்பண்ணித் தாய்மொழியைக் கெடுக்கிறான் – வெளிக் குப்பையெல்லாம் தமிழுக்குள்ளே திணிப்பதற்கே துடிக்கிறான்! வடமொழிதான் இவனையின்னும் ஆளுது – பின்னர் வந்துசேர்ந்த ஆங்கிலமும் கூடியாட்டம் போடுது! விடுதலையே இவனுக்கென்றும் இல்லையோ! – இவன் வேற்றுமொழி அடிமைசெய்ய வேண்டிவந்த பிள்ளையோ!
காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 126-150: இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆனி 29, 2045 / சூலை 13, 2014 இதழின் தொடர்ச்சி) 126. அனைய திருப்பதிகம்உடன் அன்பு உறு வண் தமிழ் பாடி அங்கு வைகி நினைவுஅரியார் தமைப் போற்றி நீடு திருப்புலியூரை நினைந்து மீள்வார். –பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 173 127 & 128. அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தை பிரியாத பெரிய திருத் தாண்டகச் செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதி விரியா நின்று எவ் உலகும் விளங்கிய…
அசோகர் காலத்திற்குப் பிற்பட்டதே சமற்கிருதம் – வழிப்போக்கன்
‘சமசுகிருதம் முதலில் தோன்றியதா…அல்லது தமிழ் முதலில் தோன்றியதா’ – நீண்ட காலமாக நீண்டுக் கொண்டு இருக்கும் ஒரு விவாதம்.இதனை நாம் இப்பொழுது பார்க்க வேண்டியதன் காரணம் இம்மொழிகளைப் பற்றி அறியாமல் இந்தியாவின் அரசியல் வரலாற்றினையோ ஆன்மீக வரலாற்றினையோ நாம் இன்று நிச்சயம் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாது. சரி…இப்பொழுது பதிவுக்குச் செல்வோம். இன்று பெரும்பாலான மக்கள் சமசுகிருதத்தினையே முதல் மொழி என்று கருதிக் கொண்டு இருக்கின்றனர். இதற்கு முழு முதற்க் காரணம் நாம் முதல் பதிவில் கண்ட சர் வில்லியம் சோன்சும் மாக்சு…
காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 101-125
– இலக்குவனார் திருவள்ளுவன் 101. இன்று இவர் பெருமை எம்மால் இயம்பல் ஆம் எல்லைத்து ஆமோ? தென் தமிழ்ப் பயனாய் உள்ள திருத் தொண்டத் தொகை முன் பாட அன்று வன் தொண்டர் தம்மை அருளிய ஆரூர் அண்ணல் – பெரியபுராணம்: 2. தில்லை வாழ் அந்தணர் சருக்கம்: 2. தில்லை வாழ் அந்தணர் நாயனார் புராணம்: 9 102. ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழும் தரும். – பெரியபுராணம்: 4. மும்மையால் உலகாண்ட சருக்கம் : 16. மூர்த்தி…
