வழிவழியாகச் சிறந்து வாழ்வாயாக…! – சங்கப்புலவர்கள் பொன்னுரை – 4: இலக்குவனார்திருவள்ளுவன்
(சங்கப்புலவர்கள் பொன்னுரை – 3 தொடர்ச்சி) வழிவழியாகச் சிறந்து வாழ்வாயாக…! வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்துபொலிமின்!(தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல் 422) கடைச்சங்கக் காலத்தைத்தான் நாம் சங்கக்காலம் என்கிறோம். அதற்கு முற்பட்ட சங்கத்தைச் சேர்ந்ததுதான் தொல்காப்பியம். எனவே, தொல்காப்பியப் பொன்னுரைகளையும் சங்க இலக்கியப் பொன்னுரையில் சேர்த்துப் பார்ப்போம். கடவுள் வணக்கம் என்பது தமிழர்க்குரியதுதான். ஆனால், அதில் மூடநம்பிக்கை கலக்கக் கூடாது. தெய்வ முணாவே மாமரம் புட்பறைசெய்தி யாழின் பகுதியொடு தொகைஇஅவ்வகை பிறவுங் கருவென மொழிப. …
