(வெருளி நோய்கள் 1176-1180 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1181-1185 தம்பா(Tampa) மாநகரம் தொடர்பான தேவையற்ற பேரச்சம் தம்பா வெருளி.ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தம்பா மாநகரம் உள்ளது. இம் மாநிலம், மாநில மக்கள், விளைபொருள்கள், பழக்க வழக்கங்கள், தொடர்பானவை குறித்துக் காரணமற்ற பேரச்சம கொள்வர் இத்தகையோர்.00 தராசு தொடர்பிலான அளவு கடந்த பேரச்சம் தராசு வெருளி.தராசு நிறைகோல் என்றும் துலாக்கோல் என்றும் அழைக்கப் பெறும்; தட்டுத்தராசு, வில் தராசு, மின்னணு தராசு, வேதியல் தராசு எனப் பலவகைப்படும். தராசுகளில் மோசடி செய்து எடையைத்…