தாயே! வேறு கடவுளும் உண்டோ?- கவி இளவல் தமிழ்
வலி பொறுத்தவள் ! பேரருட் கருணையின் திரு உருவாகி வலி பொறுத்தெம்மை பிறப்பளித் தீன்று மேதினி மீதினில் நனி உயிராக்கி நன்மையும் தீமையும் வகுத்துரைத்தெமக்குக் களிப்புறச் சிந்தையில் கனித்தமிழ் ஏற்றி இச்சகத்தினில் புகழுறத் தனித்துவம் தந்து சபைகளும் போற்றும் நல் சான்றோனாக்கி காசினி மீதினில் கவியென்றென்னை தனியொரு ஆளாய் நிறுவிய தாயே நின் கால்புரள் புழுதிக்கு ஈடென்றாகிட இக்கடல் சூழ் உலகிலோர் கடவுளும் உண்டோ ? கவி இளவல் தமிழ்
என் தாய் – – தமிழ்மகிழ்நன்
அன்பினைக் காட்டி அறிவினைப் புகட்டி அணியெனத் திகழ்பவள் என்தாய்! தென்றலாய் வீசித் தேன்தமிழ் பாடி சிந்தையில் நிறைந்தவள் என்தாய்! மன்றிலில் பெயர்த்தி மாண்புடை பெயரர் மலர்ந்திட மகிழ்பவள் என்தாய்! வென்றிடும் வித்து! விளைநிலம் அவளே விறலவள் தந்தனள் வாழ்க! கனவினும் கடமை கணமதுள் மறவாள் கலங்கரை விளக்கமே என்தாய்! இனம்மொழி நாடு ஈடிலா உயிராய் ஏற்றியே போற்றுவள் என்தாய்! தனக்கென வாழாள் தன்மகார் வாழத் தன்னுயிர்ப் பொருளினைத் தருவாள்! மனமுயிர் மெய்யும் மலரென உருகும் மழலையர் குணமவள் குணமே! சுவைமிகு உணவை நொடியினில் சமைப்பாள்…
என் தாய்
– திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன் 92802 53329 தாயுனைத் தொழுதுன் திருவடி பணிவேன் தன்னலச் சேற்றினில் மாயேன்! கோயிலில் உறையும் கொற்றவை போலே குடியினைக் காப்பவள் நீயே! சேயெமைக் காக்க சீரலொ மிழந்தாய்! செல்வமே பிள்ளைக ளென்றாய்! ஓயுத லின்றி உழைப்பினைத் தந்தாய்! உனக்கிலை ஒருவரு மீடே! பற்பல தெய்வம் படைத்தன ரெனினும் பண்புடை தாய்முதற் தெய்வம் நற்றவம் செய்தேன் நானுனைத் தாயாய் நல்லறப் பேற்றினால் பெற்றேன்! வெற்றுரை யில்லை வெடித்தெழும் நெஞ்சின் விழைவது அம்மையே…
