இவை தமிழே! ‘ஆதி’ தமிழ்ச்சொல்..! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

இவை தமிழே! ‘ஆதி’ தமிழ்ச்சொல்..!  நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி மீட்பதே மக்கள் இயல்பு. ஆனால் தமிழ் ஆர்வலர்கள் நமக்குரிய தமிழ்ச்சொற்களை அடுத்தவருக்கு உரியவை எனத் தாங்களே கொடுத்து விடுகின்றனர். ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் மிகுதியாக உள்ளன. அவற்றுள் பழக்கத்தில் இல்லாத புதிய சொல்லை மட்டும் தமிழ் என்று ஏற்றுக் கொண்டு பழக்கத்தில் உள்ள நல்ல சொல்லைத் தமிழல்ல என்று தூக்கி எறியும் பழக்கமும் உள்ளது.  எனவே, தமிழல்ல எனத் தவறாக எண்ணும் தமிழ்ச்சொற்களி்ல்ஒன்றை இப்பகுதியில் காணலாம். ‘ஆதி’…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 7 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.)    7  சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும். (திருவள்ளுவர், திருக்குறள் 306)  சினம் என்னும் நெருப்பு, அதனைக் கொண்டவரை மட்டுமல்லாமல் அவருக்குத் துணையாக இருப்பவரையும் அழிக்கும் என்கிறார் திருவள்ளுவர். நெருப்பு கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பின் உணவைச் சமைத்தல் போன்ற நிலைகளில் பயன் தரும். ஆனால் கட்டுப்படுத்தப்படாவிட்டால்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 6 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.) 6 புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் (திருவள்ளுவர், திருக்குறள் 298) “புறத்தில் உள்ள தூய்மை நீரால் அமைகின்றது. உள்ளத்திலுள்ள குற்றமில்லா தூய்மை என்பது வாய்மையால் காணப்படும்” என்கிறார் திருவள்ளுவர். உலகில் 70 விழுக்காட்டிற்கு மேலாக நீர்தான் நிறைந்துள்ளது. உயிரினங்களின் உடலிலும் நீர்மம் உள்ளது. இத்தகைய இன்றியமையாத…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்  (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.) 5  வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.(திருவள்ளுவர், திருக்குறள் 271) ஐம்பூதங்கள் சேர்க்கையே இப்பெரு உலகம். உலகம் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களும் ஐம்பூதங்களின் சேர்க்கை என்பதுதான் அறிவியல்.  இந்த அறிவியல் செய்தியைத் திருவள்ளுவர் மேற்குறித்த குறட்பா மூலம் தெரிவிக்கிறார். வஞ்சக மனம் கொண்டு  அதனை மறைத்து வெளியில்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 4 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.)   4  சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு (திருவள்ளுவர், திருக்குறள் 267 ) மண்ணில் இருந்து எடுக்கப்படும் பொன் முழுத் தூய்மையானது அல்ல! அதில் கலந்துள்ள வேண்டாப் பொருள்களை அகற்றினால்தான் தூய்மையான தங்கம் கிட்டும். அதற்குப் பயன்படுவது நெருப்பு. நெருப்பின் தன்மை சுடுவது. தங்கத்தை நெருப்பால்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் – 3, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)   3 அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு மல்லன்மா ஞாலங் கரி (திருவள்ளுவர், திருக்குறள் 245)   “அருள் உள்ளம் கொண்டவர்க்குத் துன்பம் இல்லை. அதற்குச் சான்று காற்று இயங்கும் வளம் உடைய பெரிய உலகம்” என்கிறார் திருவள்ளுவர். காற்று எல்லாக் காலத்தும் எல்லா இடத்தும் எல்லா உயிர்க்கும் உதவி நிலைத்து…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 2, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்  (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  2   நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். (திருக்குறள் 17)  ஆழமும் அகலும் உள்ள பரந்து விரிந்துள்ள அளவில்லாத கடலும் தன் நீர் வளத்தில் குறைந்து போகும். எப்பொழுது? எப்படி? அக்கடலில் இருந்து நீர்  மேலே சென்று மழையாகி மீண்டும் அக்கடலுக்கு நீரை வழங்காவிட்டால்  கடல் தன்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  1  அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. (திருக்குறள் 1)  திருவள்ளுவர் கூறும் இம்முதல் குறட்பாவிலேயே மிகப்பெரும் அறிவியல் உண்மையை உணர்த்தியுள்ளார். இக்குறளுக்கு உரை எழுதியுள்ள பெரும்பான்மையர் ஆதி பகவன் என்பதற்குக் கடவுள் என்றே கூறியுள்ளனர். பகவன் என்பதற்குச் சூரியன் என்றும் பொருளுண்டு.  பிங்கல நிகண்டு (சூத்திரம் 210)…

பெறுமதியான பங்காளியா இலங்கை? – புகழேந்தி தங்கராசு

பெறுமதியான பங்காளியா இலங்கை?     வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை விலங்குகளை வேட்டையாடுவது போலத் தமிழர்களை விரட்டி விரட்டிக் கொன்று குவித்த பிறகு, மகிந்த இராசபக்ச கூசாமல் பேசிய சொற்களில் ஒன்று – ‘மீள்குடியேற்றம்’. 2009 முதல் 2014 வரை மகிந்தன் பயன்படுத்திய அந்தப் பித்தலாட்ட சொல், இப்போது மைத்திரியின் வசம். ஆறே மாதத்தில் தமிழர்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விடுவார்கள் -என்று இப்போது அவர் சோதிடம் சொல்வது, தமிழர்களையும் பன்னாட்டு சமூகத்தையும் எப்படியாவது ஏமாற்றியாக வேண்டும் என்கிற எண்ணத்தின் விளைவு.   இப்போது…

தயாமோகன் விளக்கும் கருணாவின் இரண்டகம் – பா.ஏகலைவன்

  விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண அரசியல்துறை பொறுப்பாளர் தயாமோகனின் மனம் திறந்த பேட்டி..   விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணக் கட்டளைத் தளபதியாகவும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்திக்கச் செல்லும்போது துப்பாக்கியை உடன் கொண்டுசெல்ல இசைவளிக்கப்பட்ட புலிகள் தளபதிகளில் ஒருவருமான கருணா, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றபோது கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராகப் பணியாற்றியவர் தயாமோகன்; விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 20ஆண்டு காலம் பணியாற்றியவர்.   2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் காட்டுக்குள் இருந்து சூன் மாதம் இசுலாமிய நண்பர்…