ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 28: புலவர் கா.கோவிந்தன் : அசோகனும் தமிழ்நாடும்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 27: சந்திரகுப்புதனும் தென் இந்தியாவும்-தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு . . . . அசோகனும் தமிழ்நாடும் ஆனால், அசோக வருத்தனன் காலத்திலும், தமிழ்நாடு, மகத ஆட்சி எல்லைக்கு வெளியிலேயே இருந்துவந்துள்ளது. மக்களின் நோய் தீர்க்கவும் மாவினங்களின் நோய் தீர்க்கவும், அவன் நிறுவிய இரு நிறுவனங்கள் குறித்துப் பேசும் , அவனுடைய இரண்டாவது பாறைக்கல்வெட்டில், சோழ, பாண்டிய, சத்திரிய புத்திர, கேரள புத்திரர்களை “அந்த” அஃதாவது அண்டை நாட்டவர் அல்லது எல்லைப் புறத்தில் உள்ளார், என்றே குறிப்பிட்டுள்ளான். அவனுடைய 13ஆவது…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 27: புலவர் கா.கோவிந்தன்: சந்திரகுப்புதனும் தென் இந்தியாவும்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 26 : சேர, சோழ, பாண்டிய அரசுகள் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு . . . . கி.மு. நான்காம் நூற்றாண்டில், வட இந்தியாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் இடையிலான வாணிகம், எப்போதும் இருந்திராத அளவு மிகப்பெரிய அளவினை அடைந்திருந்தது. இது குறித்துக் கெளடில்யர் கூறியன அனைத்தையும், அப்படியே முழுமையாகத் தருகின்றேன். “நிலவழி நெடுஞ்சாலையைப் பொறுத்தமட்டில், இமாலயத்திற்குச் செல்லும் வழி, தட்சிண பரதத்திற்குச் செல்லும் வழியினும் மேலானது என்று கூறுகிறார் ஆசிரியர். வெகு தொலைவில் உள்ள முன்னதிலிருந்து…