(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 85 : பொதிகைக் காட்சி-தொடர்ச்சி) பூங்கொடி தேனருவி           வான முகட்டின் வாய்திறந் திறங்குதல்            மானை வீழ்ந்திடும் தேன்சுவை அருவியின்    140           ஓங்குயர் தோற்றமும் ஒய்ய்யெனும் ஓசையும் பாங்கிஎன் எருத்தையும் செவியையும் வருத்தின;   —————————————————————           மல்லல் – வளப்பம், தண்டாது – இடைவிடாது, கங்குல் – இரவு, மான – போல, ஒய்ய்யெனும் – ஒலிக்குறிப்பு, எருத்து – கழுத்து. ++++ வானுற நிவந்த வால்வெண் ணிறத்தூண் தானது என்னத் தயங்கி நின்றிடும்;                  …