தொல்காப்பியமும் பாணினியமும் – 5 : மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் – இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 4 : முதனூல் – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 5 மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் இது குறித்துப் புலவர் செந்துறைமுத்து (பரிபாடல் பழக்க வழக்கங்கள்: பக். 14) பின்வருமாறு தெரிவிக்கிறார்: “தமிழ் இலக்கிய உலகு மிகவும் பழமைபட்டது; பரந்து பட்டது; பெருமைபட்டது. தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகு எனவும் தமிழ் கூறும் இலக்கிய உலகு எனவும் கூறலாகும். காலவரையறையைக் காண வியலாத பழமையையும் பெருமையையும் கொண்டது தமிழ் உலகு. தமிழ் உலகில் வழங்கும் நூல்களில் தொல்காப்பியம் மிகவும் பழமை வாய்ந்தது….
தொல்காப்பியமும் பாணினியமும் – 3 : நூற்சிறப்பு – இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 2 :பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் நூற்சிறப்பு தொல்காப்பியச் சிறப்பு தொல்காப்பியம், பழந்தமிழர் வரலாற்றை எழுதுவதற்கு வேண்டிய கருவூலமாகத் திகழ்வது என்றும் தொல்காப்பியமே கிறித்து காலத்திற்கு முற்பட்ட வரலாற்று வாயில் என்றும் பேரா.முனைவர் சி.இலக்குவனார் தொல்காப்பியத்தின் சிறப்பினைப் பாராட்டுகிறார். “பொருள்” சிந்தனை தமிழுக்கே உரியது. தொல்காப்பியரும் முன்னோர் வழித் தம் நூலான தொல்காப்பியத்தில் பொருள் சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார். இதனைப் பேராசிரியர் க. அன்பழகனார் (கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா: அணிந்துரை: பக்கம். 12-13) பின்வருமாறு கூறுகிறார்:- “மேலும்,…
அழிவுற்ற தமிழ் ஏடுகளின் பட்டியல் மிகுதியாம்! – க.அன்பழகன்
அழிவுற்ற தமிழ் ஏடுகளின் பட்டியல் நாம் பெற்றுள்ளனவற்றிலும் மிகுதியாம்! அவ்வகையில் தமிழில் பிறந்த சங்கத் தொகை நூல்களின் செய்யுள்களுக்கும், எப்பாலவரும் போற்றும் அய்யன் திருவள்ளுவரின் முப்பாலாம் திருக்குறளுக்கும் முற்படத் தோன்றிய ஒல்காப்புகழ் தொல்காப்பியம் ஓர் ஒப்பற்ற இலக்கண நூலாய்த் திகழ்வதாம். “இலக்கியம் கண்டதற்கென்றே இலக்கணம்” கூறலாகும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், அதற்கு முன்னரே தமிழில் தோன்றி வழங்கிய செய்யுள் இலக்கியங்களும் இலக்கண நூல்களும் மிகப் பலவாகும். முத்தமிழும் வளர்த்த முச்சங்கங்களுள், தலை, இடைச் சங்கங்கள் இரண்டின் காலத்திலும் வழங்கிப் பின்னர்க் கடல்கோள் முதலானவற்றால் அழிவுற்ற…
தொல்காப்பியத்துக்கு முன் பல்வகை இலக்கண நூல்கள் தமிழில் இருந்துள்ளன – மா.நன்னன்
தொல்காப்பியத்துக்கு முன் பல்வகை இலக்கண நூல்கள் தமிழில் இருந்துள்ளன. நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் தொல்காப்பியமே முதல் நூலாகும். தொல்காப்பியத்துக்கு முன் தமிழில் பல்வகை இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்றும் அவற்றையும் தம் கருத்துகளுக்குத் துணையாகத் தொல்காப்பியர் பயன்படுத்திக் கொண்டுள்ளாரென்பதும் அவர்தம் நூலில் பற்பல இடங்களிலும் என்ப, என்மனார், என்றிசினோர் என்பனபோலக் கூறியுள்ளமையால் புலப்படும் உண்மையாகும். தமிழரின் மொழி, பண்பாடு, வாழ்வு போன்ற அனைத்தையும் ஓரளவேனும் அறிந்து கொள்ள உதவும் சில்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சரியான ஆதாரம் அது என்பதையும் நாம் புறக்கணித்துவிடக் கூடாது….