நடைமுறை ஆண்டுப் பிறப்பு வாழ்த்துகள் 2026
நடைமுறை ஆண்டுப் பிறப்பு வாழ்த்துகள் 2026 “நானிலம் சிறக்கவே நன்னெறி காணவே நலம் திகழவே வளம் நிறையவே அல்லன அழியவே நல்லன பெருகவே நல்லோர் உயரவே இல்லார்க்கும் வல்லார்க்கும் நல்லார்க்கும் பொல்லார்க்கும் எல்லார்க்கும் வாழ்த்துகள் நடைமுறை யாண்டில் என்றென்றும் வாழிய!” நடைமுறை ஆண்டு எனக் குறிப்பதன் காரத்தை அறிய 2019 இல் அகரமுதல இதழில் எழுதிய கட்டுரையை அளிக்கின்றேன். நடைமுறை ஆண்டும் தமிழ் ஆண்டுப் பகுப்பின் சிறப்பும் சனவரி முதல் நாளன்று நாம் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறோம். ஆனால் நாம் எண்ணுவதுபோல் இஃது ஆங்கில ஆண்டுமல்ல, கிறித்துவ…
ஆவணியில் தொடங்குவது ஆண்டு! சித்திரையில் தொடங்குவது வருடம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆவணியில் தொடங்குவது ஆண்டு! சித்திரையில் தொடங்குவது வருடம்! தமிழ்ப்புத்தாண்டு தொடக்கத்தில் மேற்குறித்த தலைப்பு புதிராக இருக்கலாம். தைப்புத்தாண்டிற்கு மாறான கருத்துகளைத் தெரிவித்தாலே கண்டன அம்பு தொடுப்போர் இருப்பதையும் அறிவேன். 60 ஆண்டுக் காலச்சுழற்சியில் அறிவுக்குப் பொருந்தாத ஒழுக்கக்கேடான கதைகளைக் கற்பித்து இழுக்கு ஏற்படுத்தும் வகையில் சித்திரை ஆண்டு மாறியதால் வந்த தைப்புத்தாண்டு வரவேற்கத்தக்கதே. நாம் அனைவரும் பின்பற்றப்பட வேண்டியதே! அதே நேரம் கடந்த கால வரலாற்றை அறியவேண்டியதும் நம் கடமையாகும். அந்த வகையில் அமைந்தததே இக்கட்டுரை. வருடம் என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல்…
