தொல்காப்பியமும் பாணினியமும் – 5 : மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம்  – இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 4 : முதனூல்  – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 5 மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் இது குறித்துப் புலவர் செந்துறைமுத்து (பரிபாடல் பழக்க வழக்கங்கள்: பக். 14) பின்வருமாறு தெரிவிக்கிறார்:       “தமிழ் இலக்கிய உலகு மிகவும் பழமைபட்டது; பரந்து பட்டது; பெருமைபட்டது. தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகு எனவும் தமிழ் கூறும் இலக்கிய உலகு எனவும் கூறலாகும். காலவரையறையைக் காண வியலாத பழமையையும் பெருமையையும் கொண்டது  தமிழ் உலகு. தமிழ் உலகில் வழங்கும் நூல்களில் தொல்காப்பியம் மிகவும் பழமை வாய்ந்தது….

தொல்காப்பியமும் பாணினியமும் – 4 : முதனூல்  – இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 3 தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 4 முதனூல் தொல்காப்பியம் தமிழர்க்குக் கிடைத்த முதலாவது நூலே தவிர, அதுவே தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் அல்ல. இது குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனார் (தொல்காப்பிய ஆராய்ச்சி , பக்கம்: 10) பின் வருமாறு உரைக்கிறார்: “தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம் என்று கூறப்படுகின்றது.  தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் நமக்குக் கிடைத்தில.  ஆதலின் தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் இல்லையென்று கூறிவிட இயலாது.  தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும்.  எம்மொழியிலும்…

தொல்காப்பியமும் பாணினியமும் – 3 : நூற்சிறப்பு – இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 2 :பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் நூற்சிறப்பு தொல்காப்பியச் சிறப்பு தொல்காப்பியம், பழந்தமிழர் வரலாற்றை எழுதுவதற்கு வேண்டிய கருவூலமாகத் திகழ்வது என்றும் தொல்காப்பியமே கிறித்து காலத்திற்கு முற்பட்ட வரலாற்று வாயில் என்றும் பேரா.முனைவர் சி.இலக்குவனார் தொல்காப்பியத்தின் சிறப்பினைப் பாராட்டுகிறார்.  “பொருள்” சிந்தனை தமிழுக்கே உரியது. தொல்காப்பியரும் முன்னோர் வழித் தம் நூலான தொல்காப்பியத்தில் பொருள் சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார். இதனைப் பேராசிரியர் க. அன்பழகனார் (கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா: அணிந்துரை: பக்கம். 12-13) பின்வருமாறு கூறுகிறார்:- “மேலும்,…

வெருளி நோய்கள் 356 – 360 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 351 – 355 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) வெருளி நோய்கள் 356 – 360 இழிவு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இழிவு வெருளி.இழிவு படுத்தப்படுதல், அவமானத்திற்கு உள்ளாதல், தாழ்வுபடுத்தல், மதிப்பிழக்கச் செய்தல்(humiliation) போன்ற சூழல்களில் ஏற்படும் அளவு கடந்த பேரச்சத்தையும் இது குறிக்கிறது.இழிவு படுத்துதல் முதலியவற்றை நால்வகையாகப் பிரிக்கின்றனர். தெரிந்தவரில் தவறு செய்தவரை இழிவு படுத்தல் தெரிந்தவரில் தவறு செய்யாதவரை இழிவு படுத்தல், தெரியாதவரில் தவறு செய்தவரை இழிவு படுத்தல், தெரியாதவரில் தவறு செய்யாதவை இழிவு படுத்தல் என…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 9 : பெண்களைப் போற்றிய தொல்காப்பியர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 8 – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 9 பெண்களைப் போற்றிய தொல்காப்பியர்! “செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லான “  (தொல்காப்பியம், பொருளதிகாரம், பொருளியல், நூற்பா 15) “செறிவு என்பது அடக்கம்; நிறைவு என்பது அமைதி; செம்மை என்பது மனங்கோடாமை; செப்பு என்பது சொல்லுதல்; அறிவு என்பது நன்மை பயப்பனவுந் தீமை பயப்பனவும் துணிதல்; அருமை என்பது உள்ளக் கருத்து அறிதலருமை” என்று இளம்பூரணர் உரை வகுத்துள்ளார். செப்பும் என்பதற்குக் கூறத் தகுவன கூறலும் என்கிறார் பேரா.முனைவர்…