தோழர் தியாகு எழுதுகிறார் 8: கனவுத் திட்டங்கள் கதைத்தல் எளிது!
(தோழர் தியாகு எழுதுகிறார் 7: முனைமுகத்தே துவாலு- இன் தொடர்ச்சி) கனவுத் திட்டங்கள் கதைத்தல் எளிது! ஒல்லாந்து (Holland) நாட்டின் வீரச் சிறுவன் பீட்டரின் கதை பள்ளிப் பருவத்தில் ஆங்கிலப் பாடத்தில் படித்த நினைவுள்ளது. நீங்களும் படித்திருக்கலாம். அந்தச் சிறுவன் ஒரு நாள் அந்தி சாயும் நேரம் தனியாக நடந்து போய்க் கொண்டிருக்கும் போது அந்தக் காட்சியைப் பார்த்தான்: கடல்நீர் ஊருக்குள் வந்து விடாமல் தடுப்பதற்காகக் கட்டப்பட்டிருந்த அணையில் சிறிய ஓட்டை வழியாகத் தண்ணீர் பீய்ச்சிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரின் அளவும் வேகமும்…
தோழர் தியாகு எழுதுகிறார் 7 : முனைமுகத்தே துவாலு
(தோழர் தியாகு எழுதுகிறார் 6: துவாலு தெரியுமா உங்களுக்கு? இன் தொடர்ச்சி) முனைமுகத்தே துவாலு காலநிலை மாற்றம் உலகை அச்சுறுத்தும் பெரும் நெருக்கடியாக முற்றி வருகிறது என்று சூழலியலர் எவ்வளவுதான் சொன்னாலும் அப்படியெல்லாம் இருக்காது என்று தன்னாறுதல் கொள்வதுதான் பாமர இயல்பு. ஆனால் பாமரரும் புறந்தள்ள முடியாத படி துவாலு நாட்டைப் பற்றிய செய்திகளால் காலநிலை மாற்றம் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது. துவாலு — பசிஃபிக் கடலில் அருகருகே அமைந்த ஒன்பது தீவுகளைக் கொண்ட ஒரு சின்னஞ்சிறிய தீவுக் கூட்டம். இவற்றில்…
தோழர் தியாகு எழுதுகிறார் 6: துவாலு தெரியுமா உங்களுக்கு?
(தோழர் தியாகு எழுதுகிறார் 5 இன் தொடர்ச்சி) துவாலு தெரியுமா உங்களுக்கு? துவாலு தெரியுமா உங்களுக்கு? சில நாள் முன்னதாகத்தான் நான் தெரிந்து கொண்டேன். இது ஒரு நாட்டின் பெயர். நேற்று ஐநா மனிதவுரிமைப் பேரவையில் உலகளாவிய காலமுறை மீளாய்வு (UPR) என்ற திட்டத்தில் இந்தியாவின் முறை. அந்த நிகழ்ச்சியைத் தமிழ்நாட்டிலிருந்து நேரலையாகக் காணும் வாய்ப்பை மக்கள் கண்காணிப்பகம் ஏற்படுத்திக் கொடுத்தது. மொழிபெயர்ப்பாளனாக நான் பங்காற்றினேன். அப்போது தூதுவர்களின் இருக்கையில் நாடுகளின் பெயர்களை எழுதி வைத்திருக்கக் கண்டேன். என் கண்ணில் அந்தப் பெயர் பட்டது….