அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 77-79

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 74-76 – தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 77. இரு குரங்கின் கைச்சாறு பரம்பரை அனுபவம் என்பது சிறிதும் இல்லாமல், குருவை அணுகிக் கேளாமல், தானே ஒருவன் ஒலைச் சுவடிகளைப் படித்து வைத்தியம் செய்யத் தொடங்கினான். ‘ஒத்தைத் தலைவலிக்கு இரு குரங்கின் கைச்சாறு தடவக் குணமாகும்’ என்று ஒலைச் சுவடியிலிருந்தது. இவன், இதற்காகக் காட்டிற்குச் சென்று இரண்டு குரங்குகளைப் பிடித்துக் கொண்டுவந்தான். பாறையிலே அதன் கைகளை வெட்டி நசுக்கிச் சாறு பிழியலானான். அப்போது அங்கே வந்த பெரியவர், ‘தம்பீ!…

வெ.அரங்கராசனின் குறள்பொருள் நகைச்சுவை – குமரிச்செழியனின் நயவுரை

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவர் ஆண்டு சித்திரைத் திங்கள் 5 [18–-04—2015] அன்று திருக்குறள் எழுச்சி மாநாடு நடைபெற்றது.      அங்குத் தமிழ்மாமணி பேராசிரியர் முனைவர் பா. வளன் அரசு அவர்களின் தலைமையில் திருக்குறள் தூயர் மிகச்சிறந்த திருக்குறள் நுண்ணாய்வாளர் பேராசிரியர் முனைவர் கு. மோகனராசு நல்வாழ்த்துகளுடன் பேராசிரியர் வெ. அரங்கராசன் எழுதிய குறள் பொருள் நகைச்சுவை என்னும் நூல் வெளியிடப்பட்டது.      நூலை வெளியிட்டவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றும் இணைப்பேராசிரியர் முனைவர் முகிலை இராசபாண்டியன். முதல் படியைப் பெற்றுக்கொண்டவர் திருக்குறள் தூதர் சு. நடராசன். அந்நூலில் இடம்…