அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 92-94
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 89-91 – தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 92. நண்பனின் ஆலோசனை ஒருவன், தன் நண்பன் ஒருவனிடம் சென்று “எனக்கு என் தாய்தந்தையர் இரண்டு பெண்களைப் பார்த்து முடிவுசெய்து, என் விருப்பத்தைக் கேட்கிறார்கள். அதில் ஒரு பெண் அழகு. படிப்பு சிறிது உண்டு. நல்ல குணம் உள்ள பெண். ஆனால் பரம ஏழை. “மற்றொரு பெண் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். அக்குடும்பத்தில் ஆண் குழந்தை இல்லாததால் அவ்வளவு சொத்தும் அந்தப் பெண்ணுக்குத் தான் சேரும். ஆனால் அழகு…