நாலடி நல்கும் நன்னெறி 12: நன்றியில் செல்வத்தை விரும்பாதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி :11. நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 12: நன்றியில் செல்வத்தை விரும்பாதீர்! அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும் கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால் செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை நள்ளார் அறிவுடை யார். நாலடியார் பொருட்பால் – இன்ப இயல் – நன்றியில் செல்வம் 262 அதிகாரத் தலைப்பு விளக்கம்: “நன்றியில் செல்வம்” என்றால், பிறருக்கு உதவாத, அல்லது பயனில்லாத செல்வம் என்று பொருள். ஒருவரிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும், அதை அவர்…