செய்தக்க செய்யா ஆளுநர்- இலக்குவனார் திருவள்ளுவன்

செய்தக்க செய்யா ஆளுநர் திருவள்ளுவர் ‘தெரிந்து செயல்வகை’ என்னும் அதிகாரத்தில் பின்வருமாறு கேடு தருவனவற்றைக் கூறுகிறார். செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும் (குறள் எண்:466) ஒருவர் கெடுதி அல்லது தீங்கு செய்தால்தான் கேடு விளையும் என்று எண்ணக்கூடாது. கேடு செய்யாவிட்டாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யத் தவறினாலும் கேடு வரும் செய்யக் கூடாதவற்றைச் செய்தாலும கேடு வரும். ஒவ்வொரு தனிமனிதருக்கும் இது பொருந்தும். குடும்பத் தலைவர் என்ற முறையில் ஒருவரின் செயல்பாடு செய்யத் தவறியும் தவறானவற்றைச் செய்தும் அமைந்தது எனில் அவரால்,…

இந்தியாவின் எதிர்காலம் குசராத்தியர் கைகளில்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 இந்தியாவின் எதிர்காலம் குசராத்தியர் கைகளில்!   பேச்சுத்திறன் மிக்கவன், பொய்யை மெய்யென நம்ப வைக்கும் திறமை பெற்றவனாக இருக்கிறான்; வறுமையில் வாழ்பவர்களையும் வளமாக வாழ்வதுபோல் நம்ப வைக்கும் ஆற்றல் உடையவனாக இருக்கிறான்; இன்னலில் வாழ்பவர்களிடமே இன்பத்தில் வாழ்வதுபோல் கருத வைக்கும் வல்லவனாக இருக்கிறான். இச்சூழலில் பொய்யர்களைக் குறை சொல்வதா? தங்கள் நிலையைக் கூட உணரா மக்களுக்காக இரக்கப்படுவதா? அறியாமை இருளில் மூழ்கியிருக் கச் செய்யும் ஆட்சியாளர்களைக் குறை சொல்வதா? பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய் போலும்மே; மெய்போலும்மே (அதிவீரராம பாண்டியர், வெற்றிவேற்கை 73)  …

தினகரன் நிழல் அமைச்சரவை அமைக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தினகரன் நிழல்  அமைச்சரவை அமைக்கட்டும்!      ‘‘எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை’’ என அதிமுக தலைவர்கள் கூறினாலும் அதிமுகவைத் தடுமாற்றத்தில் தள்ளி இயக்கிக்கொண்டிருப்பது பாசக தலைவர்கள்தாம் என்பது அனைவரும் அறிந்ததே! ஆளுங்கட்சிக்கு இணையான வலிமை உடைய எதிர்க்கட்சித்தலைவரைக்கூடச் சந்திக்காத தலைமையர் நரேந்திரர்(மோடி), பத்துபேர் கூட இல்லாத  சிறு பிரிவின் தலைவரை அடிக்கடி சந்திப்பதன்  காரணமும் இதுதானே!  வேளாண்மை நாட்டின் தலைவக இருந்து கொண்டு  வாழ்வாதாரத்திற்காகப் போராடும் வேளாண்குடிப் பெருமக்களைச் சந்திக்க மறுத்துவிட்டுப் பதவிகளுக்காகப் போராடுபவர்களைச் சந்திப்பதன் காரணமும் என்ன? அதிமுகவில் பிளவை உணடாக்க…

மத்தியப் பல்கலைக்கழகங்களையும் மாநில அரசின் அதிகாரவரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். – சீமான்

மத்தியப் பல்கலைக்கழகங்களையும் மாநில அரசின் அதிகாரவரம்பிற்குள் கொண்டுவரவேண்டும்.  ச.நே.ப. மாணவர் முத்துக்கிருட்டிணன் மரணத்திற்கு உரிய நீதி உசாவல் வேண்டும்.  – சீமான் வலியுறுத்தல் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  ‘தற்போதைய வரலாறு’ பாடத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த சேலம் மாணவர் முத்துக்கிருட்டிணன் தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினையும், ஆழ்ந்த மனவேதனையினையும் தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்து, அவர்களது குடும்பத் துயரத்தில் நாம் தமிழர் கட்சி…

பணம் செல்லாமை : இன்னலுக்கு ஆளாக்கப்படுபவர்களையே பொன்மாலை சூட்டச்செய்யும் நரேந்திரர்(மோடி) 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

[பணம் செல்லாமை : இன்னலுக்கு ஆளாக்கப்படுபவர்களையே பொன்மாலை சூட்டச்செய்யும் நரேந்திரர்(மோடி) 1/2 தொடர்ச்சி] பணம் செல்லாமை : இன்னலுக்கு ஆளாக்கப்படுபவர்களையே பொன்மாலை சூட்டச்செய்யும் நரேந்திரர்(மோடி) 2/2   சுவிசு நாட்டு வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் இருந்து  72,80,000 கோடிஉரூபாய்  மதிப்பிலான தாலர் பணம்  அந்நாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதது.   இந்தியாவிலிருந்து மொரிசியசு முதலான நாடுகளுக்குக்கருப்புப்பணம் சென்று வெள்ளைப்பணமாக  மீண்டும் இந்திய  முதலீடாக மாறுகிறது என்றும் பொருளியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்   நைசீரியா, கானா, பாக்கித்தான், சிம்பாவே, வடகொரியா, சோவியத்து ஒன்றியம்,…

பணம் செல்லாமை : இன்னலுக்கு ஆளாக்கப்படுபவர்களையே பொன்மாலை சூட்டச்செய்யும் நரேந்திரர்(மோடி) 1/2

பணம் செல்லாமை : இன்னலுக்கு ஆளாக்கப்படுபவர்களையே பொன்மாலை சூட்டச்செய்யும் நரேந்திரர்(மோடி) 1/2   குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.  (திருவள்ளுவர், திருக்குறள் 504)  எந்த ஒரு திட்டத்திலும் நல்லனவும் தீயனவும் கலந்தே இருக்கும். எவை மிகுதியாக உள்ளன? எவை நிலைத்த தன்மையுடையன? என்பனவற்றின் அடிப்படையிலேயே அத்திட்டத்தின் தேவையை நாம் உணர இயலும். கடந்த ஐப்பசி 23, 2047 / நவம்பர் 08, 2016 அன்று இந்தியத் தலைமையர் நரேந்திரர்(மோடி) 500 உரூபாய், 1000 உரூபாய் பணத்தாள்கள் செல்லா என அறிவித்தார்….

மனிதச் சங்கிலியில் கை கோப்போம்! – சுப.வீரபாண்டியன் அறிக்கை

மனிதச் சங்கிலியில் கை கோப்போம்! 500, 1000 உரூபாய்த் தாள்களைச் செல்லாது என்று அறிவித்து, ஏழை, எளிய மக்களைப் பெரும் இன்னலுக்குஆளாக்கியுள்ள,  தலைமையர் நரேந்திரர்(மோடி) தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து, தி.மு.கழகம் வரும் 24ஆம்  நாள், தமிழ்நாடு முழுவதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதனைத் திராவிட இயக்கத்தமிழர் பேரவை முழுமையாக ஆதரித்து வரவேற்பதுடன், பேரவையின் தோழர்கள் அனைவரும் இந்த மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் கைகோத்து நிற்க முடிவெடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆகவே, தோழர்களே மனிதச்சங்கிலியில் திரளாகக் கலந்துகொண்டு கை கோத்து இணைய வேண்டுகிறோம்.  …

வஞ்சகன் பெயரைச் சூட்டத் தலைமையாளர் துணை போவதா? – பழ. நெடுமாறன் கண்டனம்

வஞ்சகன்(துரோகியின்) பெயரைச் சூட்டத் தலைமையாளர் துணை போவதா? பழ. நெடுமாறன் கண்டன அறிக்கை   யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு ஆல்பர்ட்டு துரையப்பா என்பவரின் பெயரைச் சிங்கள அரசு சூட்டி, இந்தியத் தலைமையளார நரேந்திரர்(மோடி)யைக் கொண்டு அந்தப் பெயர் பலகையைக் காணொளிக் காட்சியின் மூலம் திறக்க வைத்துள்ளது. சிங்கள அரசின் சூழ்ச்சிக்கு இந்தியத் தலைமையாளர் இரையானது வருந்தத்தக்கதாகும்.  1975ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இதே திடலில் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது, அதைத் தடுக்க யாழ்ப்பாண  மாநகரத்தலைவராக இருந்த ஆல்பர்ட்டு துரையப்பா தீவிர…

தாமரையின் ஊழல் முகம் ! – பாரதி தம்பி

தாமரையின் ஊழல் இதழ்கள் !  – பாரதி தம்பி மக்களின் அவநம்பிக்கையைப் பெற, காங்கிரசுக்கு 10 ஆண்டு காலம் தேவைப்பட்டது. ஆனால் பாரதிய சனதா கட்சியோ, ஒரே வருடத்துக்குள் மாபெரும் மக்கள் அதிருப்தியைச் சம்பாதித்திருக்கிறது. காங்கிரசை மக்கள் நிராகரிக்க ஊழல் காரணம் என்றால், இந்த ஓர் ஆண்டில் பா.ச.க அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் வாதாட்டங்களும் ஒவ்வொரு நாளும் சந்தி சிரிக்கின்றன. இலலித் மோடி முதல் ‘வியாபம்’ வரை புதுப் புது ஊழல்கள்; புதுப் புது வாதாட்டங்களள்! தலைமையாளர் மோடி, எதற்குமே வாய் திறப்பது…