எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! –6, இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! –5 தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 6 இதில் 8 நாள் முதல் 10 நாள் முடிய விழா நடைபெறும்’ என உள்ளது. எட்டு நாள் எட்டாத நாள், பத்து நாள், பத்தாத நாள் என்றெல்லாம் இங்கு வேண்டா. ‘ஆவது’ என எழுத வேண்டியதுபோல் ‘ஆம்’ என்றே எழுத வேண்டும். 8-ஆம் நாள் 10-ஆம் நாள் என்றாவது எட்டாவது நாள் பத்தாவது நாள் என முழு எழுத்து வடிவிலாவது இருக்க வேண்டும். ‘பயனாளிகளுக்கு தவறாமல் கொடுக்க வேண்டும்’ என இக்கோப்பில் உள்ளது. ‘பயனாளிளுக்குத் தவறாமல் கொடுக்க வேண்டும்‘ என வர வேண்டும். நான்காம் வேற்றுமை உருபான ‘கு’வின் பின்னும்…
