(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 65-67-தொடர்ச்சி) அறிவுக்கதைகள்  நூறு 68. நான் சொல்லவில்லை 1929ல், அஃதாவது அறுபத்திஇரண்டு ஆண்டுகளுக்கு முன், நானும் பெரியாரும் திருநெல்வேலியில் ஒரு சொற் பொழிவுக்காகச் சென்றிருந்தோம். எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த இல்லத்தை நாங்கள் அடைந்ததும், எதிர்பாளர்கள் அன்றைய கூட்டத்தை நடக்கவிடாமல் செய்வதற்காக அச்சடித் திருந்த எதிர்ப்பு துண்டறிக்கைகள் சிலவற்றைக் கண்டோம். அதில் பெரியார் புராணங்களையெல்லாம் பொய் என்று சொன்னவர். நாத்திகர் – பெரியார். அவரை இன்று நெல்லையில் பேசவிடக் கூடாது என்றிருந்தது. கூட்டம் மாலை 6 மணிக்கு என்பது…