நாலடி நல்கும் நன்னெறி : 9 இளமையிலேயே நல்லன செய்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 8 : காமவழி செல்வோர்க்கு ஏமவழி யில்லை – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 9. இளமையிலேயே நல்லன செய்க! தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா வீழா இறக்கும் இவள்மாட்டும் – காழிலா மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகுந் தன்கைக்கோல் அம்மனைக்கோ லாகிய ஞான்று. -நாலடியார், இளமை நிலையாமை 14 பொருள்: கூன் விழுந்து உடல் தளர்ந்து தலை நடுங்கிக் கைத்தடி ஊன்றி வாழும் இம் மூதாட்டி முன்பு இவள் தாய் மூதாட்டியாக இருக்கும் பொழுது இளமை நலம் திகழப் பிறர்…
நாலடி நல்கும் நன்னெறி 8 : காமவழி செல்வோர்க்கு ஏமவழி யில்லை – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 7 : பயனின்றிச் சேர்ப்போர் இழப்பர் – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 8 காமவழி செல்வோர்க்கு ஏமவழி யில்லை சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப் பல்கழன்று பண்டம் பழிகாறும் – இல்செறிந்து காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே ஏம நெறிபடரும் ஆறு. பொருள்: சொற்கள் தளர்ந்து கைத்தடியுடன் நடக்கும் முதுமை வரையும் காமவழியில் செல்வார்க்குப் பேரின்ப நெறியில் செல்வதற்கு வழியில்லை. சொல் விளக்கம்: சொல்=சொற்கள்; தளர்ந்து=வலிமை குறைந்து(குழறி); கோல்=ஊன்றுகோலை; ஊன்றி=ஊன்றிக்கொண்டு; சோர்ந்த=தள்ளாடிய; நடையினர் ஆய்=நடையை உடையவராய், பல்=பற்கள், கழன்று=உதிர்ந்து,…
நாலடி நல்கும் நன்னெறி 7 : பயனின்றிச் சேர்ப்போர் இழப்பர் – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 6 – பயன்பாடு இல்லாப் பொருளால் என்ன பயன்? – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 7 பயனின்றிச் சேர்ப்போர் இழப்பர் உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும் கெடாஅத நல்லறமும் செய்யார் – கொடாஅது வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட ! உய்த்தீட்டும் தேனீக் கரி. -நாலடியார், செல்வம் நிலையாமை, 10 பொருள்: நல்ல ஆடைகளை உடுத்தாமலும் சுவையான உணவுகளை உண்ணாமலும் வறுமையாளர்களுக்குக் கொடுக்காமலும் அழியாக நல்லறச் செயல்கள் செய்யாமலும் உடலை வருத்திச் செல்வத்தை வெறுமனே சேர்த்து வைப்பவர் அதனை…
நாலடி நல்கும் நன்னெறி 6 – பயன்பாடு இல்லாப் பொருளால் என்ன பயன்? : இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 5 – நிலை புகழ் தரும் செயல் ஆற்றுக – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 6 பயன்பாடு இல்லாப் பொருளால் என்ன பயன்? உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான் துன்னருங் கேளிர் துயர்களையான் – கொன்னே வழங்கான் பொருள்காத் திரும்பானேல், அ ஆ இழந்தான்என் றெண்ணப் படும். -நாலடியார், செல்வம் நிலையாமை, 9 பொருள்: தான் உண்ணாதவனாக, மதிப்பைக் காக்காதவனாக, புகழ்மிகு செயல் செய்யாதவனாக, உறவினர்களின் துன்பங்களைப் போக்காதவனாக இரப்பவர்க்குக் கொடுக்காதவனாக வீணாகப் பொருளை வைத்திருந்து என்ன பயன்?…
நாலடி நல்கும் நன்னெறி 5 – நிலை புகழ் தரும் செயல் ஆற்றுக : இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 4. – அறம் புரிந்து அருளாளர் ஆகுக! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 5 நிலையில்லாச் செல்வததால் நிலை புகழ் தரும் செயல் ஆற்றுக! செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத புல்லறி வாளர் பெருஞ்செல்வம் – எல்லில் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி மருங்கறக் கெட்டு விடும் –நாலடியார், செல்வம் நிலையாமை, 8 பொருள்: நாம் செல்வமுடையவர்கள் என்று மகிழ்ந்து தாம் இனி இறப்பிற்குப் பின் போக உள்ள மறுமையுலகத்தை நினைத்துப் பார்க்காத சிற்றறிவுடையோரின் மிகுந்த செல்வம், இரவில்,…
நாலடி நல்கும் நன்னெறி 4. – அறம் புரிந்து அருளாளர் ஆகுக!: இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 3 – பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்!: தொடர்ச்சி) அறம் புரிந்து அருளாளர் ஆகுக ! தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும் கூற்றம் அளந்துநும் நாளுண்ணும் ; ஆற்ற அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின் ; யாரும் பிறந்தும் பிறவாதா ரில். -நாலடியார், செல்வம் நிலையாமை, 7 பொருள்: சூரியனை, முகத்தல் அளவுக்கருவியான ‘நாழி’ போன்று அளவுக் கருவியாகக் கொண்டு வாழ்நாளை இயமன் நாள்தோறும் அளக்கிறான். அவ்வாறு முழுமையாக உண்பதற்கு முன்னதாக அருள் உடையவர் ஆகுங்கள். இல்லாவிடில் பிறந்தும் பிறவாதவர்போல் கருதப்படுவீர் சொல்…
நாலடி நல்கும் நன்னெறி 3 – பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்!: இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 2.: இறப்பவரைப் பார்த்து இருப்பவர் உணர்க!-தொடர்ச்சி) பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்! இழைத்தநாள் எல்லை இகவா ; பிழைத்தொரீஇக் கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; ஆற்றப் பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் ; நாளைத் தழீஇம் தழீஇம் தண்ணம் படும். -நாலடியார், செல்வம் நிலையாமை , 6 பொருள்: வாழ்வதற்கு வரையறுக்கப்பட்ட கால அளவைக் கடந்து எமனிடமிருந்து தப்பிக் குதித்து ஓடிப் பிழைத்தவர் இல்லை! நாளைக்கே (விரைவில்) உங்களது பிணப்பறை ‘தழீம் தழீம்’ என்னும் ஓசையுடன் எழும். எனவே, பெரும் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவர்களே!…
