(பொற்காசுகளால் பொலிந்த தமிழகம் – தொடர்ச்சி) அன்றே சொன்னார்கள் – பரணர் பாடலில் நியூட்டன் விதி நியூட்டன் விதிகள் என நம்மால் போற்றப்படுவன,  அறிவியலாளர் ஐசக் நியூட்டனின் (திசம்பர் 25,1642-மார்ச்சு 20,1727) கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத் தகுந்தனவாகும்.விசை, விரைவு பற்றிய இவ்விதிகளுள் நியூட்டனின் இரண்டாம் விதி பற்றி மட்டும் நாம் பார்க்கப் போகிறோம். திசைவேகம், பொருளின் தாக்கும் விசையைப் பொறுத்து அமையும் என்கிறார் அவர். இதன்படி, ஒரு நேர்க்கோட்டில் செல்லும் விசை, குறிப்பிட்ட ஒரு பொருளின் மீது தாக்கும்போது அந்த விசை வேகம் மாறுபட்டு அமையும் அல்லது…