நிற வகைகள்-இலக்குவனார் திருவள்ளுவன்
நிற வகைகள் புதிய அறிவியல் – செவ்வாய்க் கிழமை, புரட்டாசி 2, 2043 12:03 இதிநேTuesday, September 18, 2012 12:03 IST பால் போல் வெண்ணிறம் கொண்டவனைப் பால்வண்ணன் என்றும் முத்துபோல் வெண்ணிறம் கொண்டவனை முத்து வண்ணன் என்றும் சொல்வது பழந்தமிழர் வழக்கம். மலர்களின், விலங்குகளின் வண்ண அடிப்படையிலும் நிறங்களைக் குறிப்பிட்டுள்ளனர். இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இந்நிறங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது. நிறங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை…
