(சனாதனம் – பொய்யும் மெய்யும் – பதிப்புரை – தொடர்ச்சி) சனாதனம் என்பது நிலையானதுதானா? நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறிவு ஆண்மை, கடை. என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 331) இதன் மூலம், “நிலைத்திருத்தல் அல்லாதனவாகிய பொருள்களை, நிலைத்து இருப்பன என்று நினைக்கின்ற அற்ப அறிவைக் கொண்டு இருத்தல் இழிநிலை” என்கிறார் திருவள்ளுவர். இத் திருக்குறளுக்கு விளக்கமாக,  மாதவச் சிவஞான யோகிகள் பாடிய, “சோமேசர் முதுமொழி வெண்பா” என்னும் நூலில்  இத்திருக்குறளை விளக்கிப் பின்வரும் பாடல் வருகிறது. ஆக்கையும் ஆயிரத்துஎட்டு அண்டங்களும் நிலையாத் தூக்கி…