தமிழக வரலாறு, சமூகநீதி வரலாறு – வகுப்பு தோறும் துணைப்பாடங்களாக வைக்கப்பட வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழக வரலாறு, சமூகநீதி வரலாறு – வகுப்பு தோறும் துணைப்பாடங்களாக வைக்கப்பட வேண்டும்      தொன்மையான, சிறப்பான வரலாற்றுக்கு உரியவர்களாக இருந்தும் அவ்வரலாற்றை அறியாதவர்களாக வாழ்ந்து மடிவோர் யாரெனில் உலகிலேயே தமிழ் மக்களாக மட்டும்தான் இருக்க முடியும். நம் வரலாறு குறித்த அறிந்துணர்வு இல்லாததால்தான்,  மக்கள் நலன் குறித்த விழிப்புணர்வே நம் நாட்டவரிடம்  இல்லை. நம் பாடங்களும் நம் வரலாறு தெரியாதவர்களாகவே நம்மை உருவாக்குகின்றன. எனவே,  இப்பாடங்களின் அடிப்படையில் தேர்வுகள் எழுதி உயர் பொறுப்புகளுக்கு வருபவர்களுக்கும் தமிழ் மொழி, நாகரிகம், பண்பாடு, முதலான…

திராவிடத்தைப் பழிப்போர் தம்மையே பழிப்போராவர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

  திராவிடத்தைப் பழிப்போர் தம்மையே பழிப்போராவர்!  “தமிழர்களின் தேசியமொழி தமிழ்தான். தமிழ்நாட்டில் தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் அளித்தல் வேண்டும்.”  தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனாரால் முன்னெடுக்கப்பட்ட இக்கருத்திற்கு மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. அதே நேரம்,  தமிழ்த்தேசியம் பேசுவதாக எண்ணும் சிலர், தமிழை உயர்த்துவதாக எண்ணிக்கொண்டு திராவிடத்தைப்பற்றி இழிவாகச்சொல்வது நம்மை நாமே தாழ்த்துவதாகும்.   திராவிடம் என்பது தமிழின் பெயரன்று. ஆனால் தமிழ்க்குடும்ப மொழிகளைக் குறிப்பிடுவதற்கு அடையாளமாக வந்த பெயர்.  ஆரியம் வந்த பொழுது அதற்கு  எதிராகத் தனிமையில் தமிழ் மட்டுமல்லாமல்,  அதன் மொழிக்குடும்பமே இணைந்திருக்க…