௪. தமிழா உனக்குத் தன்மானமுண்டா? – திருத்துறைக்கிழார்
(௩. தமிழர்கட்கு என்ன வேண்டும்? – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் ௪. தமிழா உனக்குத் தன்மானமுண்டா? கற்பனையில் உண்டான கல்லுருவங்களைக் கடவுள் என்று வணங்கலாமா? அவற்றின் முன் படையலிட்டும், பலியிட்டும், பாலாலும், பன்னீராலும், தேனாலும், சருக்கரையாலும் அக்கற்களை முழுக்காட்டி ஆடை சுற்றி, அணிகலன்பூட்டி, பூச் சார்த்திப் பொட்டிட்டு, மண்டியிட்டு விழுந்து கும்பிடலாமா? உன்னால் செய்ய முடியாத செயல்களை அக்கற்கள் எங்ஙனம் செய்ய முடியும்? அவை பிறர்துணையின்றி அசைய மாட்டா. வைத்த இடத்தைவிட்டு நகர முடியுமா? உனக்கு நன்மையோ…