தொல்காப்பியமும் பாணினியமும் – 5 : மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் – இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 4 : முதனூல் – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 5 மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் இது குறித்துப் புலவர் செந்துறைமுத்து (பரிபாடல் பழக்க வழக்கங்கள்: பக். 14) பின்வருமாறு தெரிவிக்கிறார்: “தமிழ் இலக்கிய உலகு மிகவும் பழமைபட்டது; பரந்து பட்டது; பெருமைபட்டது. தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகு எனவும் தமிழ் கூறும் இலக்கிய உலகு எனவும் கூறலாகும். காலவரையறையைக் காண வியலாத பழமையையும் பெருமையையும் கொண்டது தமிழ் உலகு. தமிழ் உலகில் வழங்கும் நூல்களில் தொல்காப்பியம் மிகவும் பழமை வாய்ந்தது….