கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -10 – அன்றே சொன்னார்கள் 48 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 9 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -10 கட்டடங்கள், அகலமாகவும் உயரமாகவும் நன்முறையிலும் வளத்தை வெளிப்படுத்தும் வகையிலும் நாகரிகச் சிறப்பிற்கு எடுத்துக் காட்டாகவும் பாதுகாப்பு ஏந்து(வசதி)களுடனும் அமைக்கப் பட்டன என முன்னரே கண்டோம். வீடுகள் மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்தன இவை பற்றிய புலவர்கள் சிலர் கருத்துகளைப் பார்ப்போம். புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ, கடிமனை (கலித்தொகை : 24.9) என்றும் புலவர் மதுரை மருதனிளநாகனார், கடிமனை மாடத்து (அகநானூறு: 255.18) என்றும் பாதுகாப்பு அமைந்த மாளிகைகளைக் குறிப்பிடுகின்றனர்….
வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3- அன்றே சொன்னார்கள் 39 : – இலக்குவனார் திருவள்ளுவன்
(வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3 – தொடர்ச்சி) வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3 வானைத் தொடும் அளவிற்கு உள்ளதாகக் கருதும் வகையில் உயர்ந்த மாடிக் கட்டடங்கள் இருந்தன என்பதற்காக வான் தோய் மாடம் என்றும் விண்ணை நெருங்கும் அளவிற்கான உயரம் எனக் கருதும் அளவிற்கு மாடிகள் அமைந்த கட்டடங்கள் இருந்தன என்பதற்கு அடையாளமாக விண்தோய் மாடம் என்றும் சங்க இலக்கியங்களில் குறிக்கப் பெற்றுள்ளன. நகரம் என்பதே பல மாடிகள் உடைய வீடுகள் நிறைந்தது என்பதே வழக்கம் என்னும் அளவிற்கு நகரங்கள் இருந்தன….
கதிரவன் தன்மைகளைக் கணித்த கன்னித்தமிழர், அன்றே சொன்னார்கள்35, இலக்குவனார் திருவள்ளுவன்
(வெள்ளி குறித்து வெகுவாக அறிந்திருந்தனர் – தொடர்ச்சி) கதிரவன் தன்மைகளைக் கணித்த கன்னித்தமிழர் சூரியன் அல்லது ஞாயிறு ஒரு விண்மீனே! சூரியனின் கிரேக்கப் பெயர் அப்பல்லோ என்பதாகும். கிரேக்கத் தொன்மக் கதையின்படி லெட்டோ (Leto)வின் உறவால் சீயசு (Zeus) தாய் ஆகிக் குழந்தையைப் பெற்றுக் கொள்ள இடம் தேடி அலைந்து இறுதியில் கிரேக்கத்தில் உள்ள தீவில் (தெலோசு : Delos) அப்பல்லோவைப் பெற்றெடுக்கிறாள். சப்பான், சிரியன் முதலான சில நாடுகளில் சூரியன் பெண் கடவுளாகக் கருதப்படுகிறது. சூரியக் கடவுளின் பெயர் சப்பானில் அமத்தெரசு (Amaterasu)…
வெள்ளி குறித்து வெகுவாக அறிந்திருந்தனர் – அன்றே சொன்னார்கள் 34 – இலக்குவனார் திருவள்ளுவன்
(புதன் இயல்பைப் புரிந்து இருந்தனர்! – தொடர்ச்சி) வெள்ளி குறித்து வெகுவாக அறிந்திருந்தனர் கதிரவனிலிருந்து இரண்டாவதாக உள்ள கோள். எனினும் பூமியின் மிக அருகில் உள்ள கோள். வெள்ளிக்கோளின் ஆங்கிலப் பெயர் வீனசு (Venus) என்பதாகும். வீனசு உரோமப் பெண்கடவுள் ஆகும். இலத்தீன் மொழியில் வீனசு என்றால் காதல் என்றும் காமவிருப்பம் என்றும் பெயர். இதற்கு இணையான கிரேக்கப் பெண்கடவுள் பெயர் அபிரடைடி (Aphrodite). எனவே, வீனசு காதல் கடவுள் ஆகும். உரோமானியர்கள், கிரேக்கர்கள் முதலானோர்போல், பிறப்பு, உடன் பிறப்பு கதைகள் அடிப்படையில் இல்லாமல்…
திங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்கள் – அன்றே சொன்னார்கள் 32 : இலக்குவனார் திருவள்ளுவன்
(மணிப்பொறிகளை மாண்புடன் அமைத்தனர் –-தொடர்ச்சி) திங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்கள் கடலலைகள் நிலவினால் உருவாவதாகக் கி.மு.2ஆம் நூற்றாண்டில் செலியூகசு (Seleucus) என்னும் அறிஞர் குறிப்பிட்டார். பின்னர் உரோமன் அறிஞர் செனெக்கா (Seneca) நிலவொளிக்கும் கடலலைகளுக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பிட்டார். கி.பி. 499 இல் ஆரியபட்டரும் இதைக் குறிப்பிட்டுள்ளார். கி.பி.1687 இல் அறிஞர் ஐசக்கு நியூட்டன் புவி ஈர்ப்பு விதியைத் தெரிவித்த பின்பு இக் கருத்து மேலும் வலுப்பட்டது. ஆனால், சங்கக் காலத்திலேயே நிலவொளிக்கும் கடல் அலைகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அதன் வழி…
அகநானூற்றில் ஊர்கள் : 5/7 – தி. இராதா
(அகநானூற்றில் ஊர்கள் 4/7 இன் தொடர்ச்சி) அகநானூற்றில் ஊர்கள் : 5/7 கானல்அம்பெருந்துறை தித்தன் வெளியன் என்ற அரசன் ஆண்டது இவ்வூராகும். இஃது அழகிய கடற்கரைச் சோலையையுடைய பெருந்துறை என்னும் பட்டினத்துக்கு உரியது. பிண்டன் நன்னனை வென்று வாகை சூடிய இடமாக திகழ்வதனை, “……..தித்தன் வெளியன் இரங்கு நீர்ப் பரப்பின் கானல்அம் பெருந்துறை” (அகநானூறு152, 210, 280, 300) என்ற அடிகள் மூலம் அறியலாகிறது. குடந்தை வெல்லும் வேலையுடைய வெற்றி பொருந்திய சோழ மன்னரின் குடந்தை என்பதை,…
நூலில் பிறரால் வந்து சேரும் பிழைகள்
நூலில் பிறரால் வந்து சேரும் பிழைகள் மிகைபடு பொருளை நகைபடு புன்சொலின் தந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பும் எழுதினர் பிழைப்பும் எழுத்துரு ஒக்கும் பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும் ஒருங்குடன் கிடந்த ஒவ்வாப் பாடம் திருந்திய காட்சியோர் செவிமுதல் வெதுப்பல் பரிபாடல் – உரைச்சிறப்புப் பாயிரம் : பரிமேலழகர்
கற்றால் தீரும் இழிதகைமை
கற்றால் தீரும் இழிதகைமை எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான் மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும் மொழித்திறன் முட்டறுத்த நல்லோன் முதல்நூல் பொருள் உணர்ந்து கட்டறுத்து வீடு பெறும். பரிமேலழகர் மேற்கோள் பாடல்
தமிழ் அறியாதவர்களே காதலைப் பழிப்பார்கள்! அன்றே சொன்னது பரிபாடல்!
: தமிழ் அறியாதவர்களே காதலைப் பழிப்பார்கள்! அன்றே சொன்னது பரிபாடல்! தள்ளாப் பொருளியல்பில் தண்டமிழாய் வந்திலார் கொள்ளாரிக் குன்று பயன் (பரிபாடல்: 9) “தள்ள வாராக் காதல் பொருளின் இலக்கணம் கூறும் தமிழை ஆராயாதவரே, மலையிடத்து நிகழும் களவொழுக்கத்தை ஓர் ஒழுக்கமென ஏற்றுக்கொள்ளார்” என்று குன்றம் பூதனார் காரணம் கூறிக் கழறுவர். பிற மொழிகள் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் உடையனவேயன்றி, மக்களின் வாழ்வை ஆராய்ந்த பொருளிலக்கணம் கண்டவையல்ல. தமிழ் மொழியோ எனின், முவ்விலக்கணமும் நிறைந்தது. தமிழின் பொருளிலக்கணத்தைக் கல்லாத…
யாவினுள்ளும் நீயே – கடுவன் இளவெயினனார்
தீயினுள் தெறல்நீ; பூவினுள் நாற்றம் நீ; கல்லினுள் மணியும்நீ; சொல்லினுள் வாய்மைநீ; அறத்தினுள் அன்புநீ; மறத்தினுள் மைந்துநீ. கடுவன் இளவெயினனார், பரிபாடல்: 3.63-65
யாம் இரப்பவை – கடுவன் இளவெயினனார்
இறைவனிடம் வேண்டுபவை -பரிபாடல்